பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

53


அறவாணரும்-குடிமக்களும்

மக்கள் தங்களைப் போன்ற ஒருவனை அறமுறை செய்திட அவனிடம் அதிகாரத்தை தந்து, அவன் வழங்கும் அறத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க இசைந்துள்ளனர் என்பதை அறதடுவர்கள் உணரவேண்டும். அவர்களின் நம்பிக்கை வீண் போகாத முறையில் பெரிய பதவியில் இருக்கும் அறநடுவர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும்.

முறை நடுவர் உயர்ந்த இடத்தில் அமர்ந்து உரிய அதிகாரம் பெற்றிருப்பது நாட்டின் நலனைப் பாதுகாக்கவே என்பதை மறக்கக் கட்டாது.

மக்களின் நல்வாழ்வில்தான் அ தி கா ர ம் செலுத்துபவர்களின் சிறப்பு அடங்கி இருக்கிறது. முறை நடுவர்கள் நேர்மை படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு நிறை வேற்றப்பட்ட சட்டங்களைச் சீராகக் காப்பாற்றி, முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் வாழும் மக்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரவேண்டும்.

இரக்கம் காட்டப்பட வேண்டியவர்களுக்குத் தயங்காமல் சட்டத்தின் மூலம் உதவி புரிய வேண்டும். கு ற் ற ம் சாட்டப்பட்டவர்களை ஆய்ந்து தண்டனை அளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைகளை அக்கறையுடன்