பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

ஞாயமானதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் யுடைமைகளுக்குத் தீங்கு செய்யாதே.

பேராசைகளைக் கொண்டு, தகாத முறையில் பிறருடைய உயிருக்குக் கேடு செய்திட நினைக்காதே.

பிறரைக் குறை கூறித் தாழ்த்தாதே. பொய் சாட்சி கடறாதே.

வேலைக்காரர்களை வயப்படுத்திக் கொண்டு மற்றவர்களை வஞ்சிக்கவோ, மாற்றானுடை மையை, மனைவியை அடையவோ நினைந்து இழிசெயல் புரியாதே. அப்படிச் செய்தால் மனக்கவலைக்கு முடிவே இருக்காது. உன் நிலையை மாற்றிக் கொள்ள வழியே இருக்காது.

மாற்றாரிடம் ஞாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள். அப்போதுதான் அதை நீயும் பிறரிடம் பெற முடியும். உன்னை நம்பியவர்களை வஞ்சனை செய்யாதே. ய ரையும் ஏமாற்றாதே. பிறர் பொருளைத் திருடுவது பெரிய இரண்டகமாகும்.

ஏழைகளை வஞ்சித்து ஒடுக்காதே. பாடுபடும் தொழிலாளியின் கடலியை ஏமாற்றாதே.

அதிகப் பயன் கருதி விற்பனை செய்யும்போது மனச் சா ன் று க் கு க் கட்டுப்பட்டு நட. ஏதும் அறியாத மக்களைச் சூரையாடாதே.

நீ பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்துவிடு. ஏன் என்றால் அவன் உன்னை மதித்துக்