பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

59

தான் திரும்ப செய்திடப் போதிய ஏந்து இல்லை என்றாலும், அவன் பெற்ற உதவியை மறைக்காமல் எப்போதும் தன் நினைவில் கொண்டிப்பான். வாழ் நாள் முழுவதும் தனக்குப் பிறர் செய்த நற் செயலை மறக்கவே மாட்டான்.

அறச் சிந்தனை கொண்டவனின் கைகள் வானத்து முகில்களுக்கு ஈடானது. மழைதான் தானியங்கள், காய்கறி, கனி, பூக்கள், மூலிகைகளைத் தருகின்றது. அதைப்போல ஈகைக்குணம் படைத்தவனிடம் எல்லா நன்மைகளும் மக்களுக்கு உண்டாகும்.

இரக்கமில்லாத அரக்க குணம் படைத்தவன் வெறும் மணல் நிரம்பிய பாலைவனத்திற்குச் சமமானவன். மணல் எதையும் விழுங்கி, மூடி மறைத்துக்கொள்ளும். அரக்க குணம் படைத்தவன் நல்லது ஏதும் செய்திட மாட்டான்.

வள்ளல் குணம் படைத்தவனைக் கண்டு பொறாமை கொள்ளாதே. அவன் செய்த ஈகைச் செயல்களை மறக்காதே. தாராள மனப்பான்மையுடன் செய்திடும் செயல்கள் போற்றத் தக்கவையாகும். பெற்ற உதவிக்குக் கைமாறு செய்திடத் துடிப்பது அதைவிட போற்றத் தக்கதாகும்.

உள்ளத் தூய்மை

உண்மைக்கு உள்ள சிறப்பை நீ உணர வேண்டும். பெண்ணின் எளிமையையும் அழகை-