பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

தெய்வமாக வணங்காதே. ஞாயிறும் இயற்கை படைத்த ஒரு பொருள்தான்.

இயற்கை ஒன்றே. அதுவே ஆற்றல் வாய்ந்தது. நல் அறிவு படைத்தது. எல்லா நன்மைகளும் செய்வது. வணக்கத்திற்கு உரியது. பெருமைக் குரியது. பாராட்டத்தக்கது. நன்றிக்கு உரியது. இயற்கையைப் புரிந்து கொள்வதே முட்டாள்களை திகைக்க வைப்பது. எதையும் அறிவுக் கூர்மையுடன் செய்தும், படைத்தும் சீராகச் செயல்படுத்துவது. அது வியக்கத்தக்க முறையில் பலவித மாகப் படைககும் ஆற்றல் மிக்கது. இயற்கை நமக்குக் கட்டுப்பட்டதாகும்.

இயற்கை கடைப்பிடிக்கும் வழிமுறைகளே வியக்கத்தக்கவை. புரிந்துகொள்ள முடியாதவை.

எனவே, இயற்கையின் அறிவுக்கு மதிப்பு கொடு. அதனை மண்டியிட்டு வணங்கு.

இரக்கப்பட்டு உலகத்தை அன்புடன் படைத்தது இயற்கை. எல்லா படைப்புகளுக்கும் அழகைக் கொடுத்தது; உணவு அளித்தது. எல்லா உயிர்க்கும் ஏந்துகளைப் படைத்தது. தக்க பாதுகாப்பும் தருகிறது. இயற்கையைப் போற்றிப் பாராட்டிப் புகழ்ந்திரு. நன்றி தெரிவித்துப் பாடு.

இயற்கையின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, தடக்க வேண்டும். அதனுடைய சட்டங்கள் நல்லவை-உன் நன்மைக்காக வகுக்கப்பட்டவை