பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63

நின் தவறுகளுக்கு இயற்கை உடன் தண்டிக்கவில்லை என்று அதனைக் குறைவாக நினைத்து விடாதே. நீயே பெருமை கொண்டு விடாதே. இயற்கை ஏழை பணக்காரன் என்றோ, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ பிரித்துப் பார்க்காது.

எனவே, நேர்மையுடன் சிந்தித்து நின் தவறுகளைச் சரி செய்து கொள். அருள் உனக்குக் கிட்டும்.

நாளும் அதன் புகழ் பாடு, அதன் வழியில் நட, நீதிக்குக் கட்டுப்பட்டு, நேர்மையுடன் நல்வாழ்வு வாழ; உன் வாழ்க்கையில் மேலும் மேலும் இன்பம் மொய்க்கும். இயற்கை படைத்த ஈடற்ற இன்பம் உனக்கு என்றும் இருக்கும்.

மனித உடல் அமைப்பு

நீ எளிமையானவன், ஏதும் அறியாதவன், நன்றாகச் சிந்தித்துப் பார். எங்கும் நி றை ந் திருப்பது எது? உன்னையே நீ எண்ணிப் பார், உன் அமைப்பை நினைத்துப் பார். வியப்படையத் தக்க வகையில் நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதற்காக இயற்கைக்குப் பாராட்டுத் தெரிவித்திடு. அதற்கு மதிப்புக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழு. அதனுடைய செயல்களைக் கவனி.

உனக்கும் ஒரு மனசான்றினை உண்டாக்கியவன் யார்? அது எங்கிருந்து வந்தது? யார்