பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

கொடுத்தது. அந்த மனச்சான்று தசையுமல்ல, எலும்புமல்ல. அரிமாவைப் புழுக்கள் தாம் உண்டு களிக்க போகின்றன என்பதை அரிமா அறியாது. கொலைபடும் கடைக்குத்தான் உரிமை என்பதை ஆடு மாடு அறியாது. அவற்றிற்கும் உனக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீ சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். அதனால் தான் உன்னைச் சிந்தித்து உணர வேண்டுகிறேன். உயிர் பிரிந் தாலும் உன் உடலுக்கு அழிவில்லை. நீ புரிந்த செயல்களுக்கு அது விடை கூறியாக வேண்டும்.

கழுதை உன்னைப்போல் உண்பதில்லை. ஆனால் அதற்கும் பற்கள் இருக்கின்றன. நீண்ட முதுகு எலும்பு கொண்டிருந்தும் முதலை உன்னைப் போல் நிமிர்ந்து நிற்க முடியாது. உன்னைப் படைத்த இயற்கைதான் எல்லாவற்றையும் படைத்தது. உனக்குத்தான் உயர்வான இடத்தை த ந் த து. உனக்குத்தான் மனச்சான்றினைத் தந்தது. எனவே உன்னை நீயே நன்றாகப் புரிந்து கொள். உனக்கு அது தனி மதிப்புகொடுத்திருக்கிறது. அதற்கு ஏற்றபடி நீ மேன்மையுடன் நடந்துகொள். கீழ்த்தரமாகவோ; இழிவாகவோ நடந்து கொள்ளாதே.

உனக்குத் தேவை இல்லாததை அழிக்கவும், உனக்கு வேண்டியதை வளர்க்கவும் வழி செய்திருக்கிறது, உன்னைப் படைத்த இயற்கை.