பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

65


புலன்களின் பயன்

பயிர் செய்வதற்கு முன் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். உன்னைப் படைப்பதற்கு முன் இயற்கை உள்ளது சிறத்தல் என்னும் கூர்தலறம் படைத்திருக்கிறது. உன் உள்ளமே மனசான்றே அதில் சிறப்பானதாகும். உன் உடலே உலக வடிவம் கொண்டது. உன் எலும்புகளே அதைக் தாங்கும் தூண்கள்.

கடல் தண்ணிரில் முகில்கள் உருவாகி, மழையாக மீண்டும் கொட்டி விடுகிறது. மீண்டும் தண்ணிர் ஆறுகள் மூலம் கடலை அடைகின்றன. அதைப்போல் உன் வாழ்வும் உள்ளத்தில் இருந்து தான் தோன்றுகிறது. மீண்டும் அது உன் உள்ளத்தையே அடைகிறது.

மூக்கு நறுமணத்தை நுகர்கிறது. வாய் நல்ல சுவையை நாடுகிறது. ஆனால் எதுவும் அளவுக்கு அதிகமானால் உடல் நலத்தைப் பாதித்து விடுகிறது. எது கெட்டது என்பதை நீ கண்டு அறியலாம்.

உன் மனத்தை உறுதியாக கட்டுப்பாட்டில் வைத்திரு. எல்லாம் சீராகச் செயல்படும். உன் கைகளை நீட்டி உதவி புரிந்திடு. உலகம் உன்னைக் கவனிக்கிறது. வெட்கப்பட வேண்டிய செயல்களைக் செய்யாதே. குற்றமற்றவனாக வாழ்ந்தால் நீ எதற்கும் அஞ்ச வேண்டிய நிலையோ, வருந்த வேண்டிய நிலையோ-