பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

ஏற்படாது. மனிதனுக்கு மட்டுமே எதையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலைப் புலன்களின் பயனாகப் பெற முடிகிறது. இயற்கை மனிதனுக்கு அந்த உயர்வான நிலையைத் தந்திருக்கிறது. இயற்கையைப் போன்று உன் குழந்தைகளுக்கு அந்த நல்ல அறிவைப் புகட்டு.

நெஞ்சம்-அன்பு

உடல் எப்படி நலமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாததோ அதைப்போல உன் நெஞ்சத்தைப் பாதுகாக்க நேர்மையாக வாழ வேண்டும், நீ அறிந்த உண்மை இது. பணிவோடிருந்து நன்றியுடன் நடந்துகொள்.

சிந்தித்தல், புரிந்து கொள்ளுதல், நல்லதை நாடுதல், நல்முடிவுகளை மேற்கொள்ளுதல் ஆகிய வற்றில் கருத்துடன் செயல்படு.

அடிக்கடி உன் நெஞ்சத்தை ஆய்ந்து உயர்வான வாழ்வு வாழ்ந்திடு.

கதிரவன் சூடு களிமண்ணைக் கெட்டியாக்குகிறது. மெழுகை உருக்கிவிடுகிறது. அப்படி உன் நெஞ்சம் எதைச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்திடு.

நிலவை முகில் இருள் மறைத்தாலும் அதுதன் இயற்கைத் தன்மையை மாற்றிக் கொள்வதில்லை. அது அழிந்துப்போவதும் இல்லை. அதன்