பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

67

போக்கும் மாற்றம் கொள்வதில்லை. அதன் உடல் நலத்தை அதன் எழிலில் காணலாம். நிலவு உனக்குப் பின்னரும் நீடித்து நிலைத்து இருக்கும் - உனக்காகப் பகுடக்கப் பட்டதாகும் அதற்குக் கறையால் பழுது ஏதும் ஏற்படுவதில்லை. இதை உணர்ந்து உன் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள். உன்னைப் படைத்த இயற்கைக்கு. எல்லாம் தெரியும். உன் செயல்களை மதிப்பிடுவது இயற்கை.

நடு இரவில் சேவலைக் காண விரும்பாதே. பொழுது விடிந்து விட்டது என்பதை அது கூவி விடுவதால் அதைப் பாராட்ட நினைக்காதே. அரிமாக்களின் காலடிகளைக் கொண்டு மதிப்பிடாதே. அவை எல்லாம் இறந்தால், அதன் நெஞ்சத்தில் ஏதும் நினைவு இருக்காது. உன் நிலை வேறு. நீயே நல்லவற்றைக் கொண்டவன் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்து.

மான்களின் காதுகள் கடர்மையானவை கழுகுக்குக் கண் பார்வை அதிகம். மோப்பம் பிடிப்பதில் வேட்டை நாய் உயர்வானது. இருந்தும் அவற்றிற்குப் பேசும் ஆற்றல் இல்லை. அவற்றில் எதுவும் எதை ஏன் செய்தது என்று விளக்கம் அளிக்க இயலாது.

மனிதனுக்கு எதையும் விளக்கமாகக் கூறும் ஆற்றலைத் தந்துள்ளது இயற்கை. அது பெரிய செல்வம்.