பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

71


இளைஞனாக இருக்கும்போதே ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழக் கற்றுக் கொண்டால் நினக்கு மேன்மையும் மதிப்பும் ஏற்படும்.

தற்பெருமை

மனிதனின் நெஞ்சத்தில் தற்பெருமை அதிக வலிமை பெற்று விளங்குகிறது. தன் அடக்கம் இல்லாதவனின் நிலையைக் காட்டுகிறது. தற்பெருமை கொண்டவனின் வாழ்க்கை கனவாக முடியும்.

இன்றுயுள்ள நிலையையுணராத நிலையில் உயர்ந்தவனாக வாழ நினைப்பது பயன் தராது. அன்று நீ எந்த நிலையில் வாழ்கிறாயோ, அதற்கு ஏற்ற முறையிலேயே உன் எதிர்கால வாழ்வும் அமையும். இன்றைய வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ள வேண்டும்.

தற்பெருமை உன் கண்களைக் குருடாக்கும். உன் நெஞ்சத்தை மறைத்து விடும். உன்னை நீ கண்டுகொள்ள முடியாத நிலையில், உன்னைப் பிறர் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

தற்பெருமை கொண்டவனின் நெஞ்சம் எப்போதும் சஞ்சலத்தில் இருக்கும். நுகரும் நலத்தைவிட நீ பல கவலைகளுக்கு ஆளாக நேரிடும். வீண் ஆகுலமாக நடந்து கொள்பவன் முடிவு இரங்கத்தக்கதாய் அமையும். ஆகுலத்தில்