பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


மூழ்கியவன் நிறைவடைய முடியாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்பதற்காகவே எதையும் செய்வான்; நீ நல்ல முறையில் வாழ முற்படு. உன் வாழ்க்கைகளைப் பற்றிப் பிறர் என்ன கருதுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தி வருந்தாதே. உன் வாழ்க்கையில் மனநிறைவு வேண்டும்.

பட்டாம் பூச்சிக்குத் தன் அழகு புலப்படாது. மல்லிகை தன் மனத்தை நுகர்ந்திடுவதில்லை அதைப்போல மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள இன்பத்தைப் பிறர் அறிய விடுவதில்லை.

நினக்குப் பட்டாடையும், தங்க அணிகளும். இருப்பது ஏன்? ஆடையில்லாதவர்க்கு உடை கொடு, ஏழைகளுக்கு உதவி செய். பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடு. ஏழைமையும்வறுமையும் பசியும் இல்லாத நிலையையுருவாக்கு. அப்போதுதான் நின்னைப் பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட பாராட்டே உயர்வானது.

உள்ளத் தூய்மையோடு சிந்தித்தும் பேசியும் செயல்படு. அப்போதுதான் உன் சொல்லுக்குப் பிறர் மதிப்புக் கொடுத்துப் பணிவார்கள். போற்றத்தக்கவன், பாராட்டத்தக்கவன் என்று. மக்களிடம் நற்பெயரை நிலை நாட்டிக் கொள்.

ஒவ்வாமை

மாறுபட்ட நிலைகளைப் பொருத்தமற்ற இயற்கை நினக்குண்டாக்குகிறது.