பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


நீ சிந்திக்க வேண்டும். எது சரி, எது நல்லது, எது விரும்பத்தக்கது என்பதை நீ சிந்தித்துச் செயல்படாததே சீரழிவுக்குக் காரணம்.

நீ இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், இதுவே சரியான பாதை என்பதை உணர்ந்த பின்னர் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

உன் மனத்தின் முடிவுக்கு எதிராக நீ செயல்பட்டால் உனக்கு அமைதி கிடைக்காது. உன் உலக வாழ்க்கை ஒரே வகையில் இருக்காது. உன் எண்ணங்களும் மாறும். காலத்திற்குக் காலம் ஏற்ற முறையில் மாற்றங்களும் மாறி அமையும்.

இன்று உன்னை விரும்புபவனே, நாளை உன்னை வெறுத்திட நேரும். எதனால் முன்பு சுவைத்ததை இப்போது வெறுக்கிறோம் என்பதே உனக்குப் புரியாது.

இன்று கொடுங்கோலனாக இருப்பவன் நாளை நல்லவனாக மாறக்கூடும்.

இன்று வளம் பெற்றவன் நாளை வறுமையால் இடர்படக்கூடும்.

பச்சோந்திக்கு ஒரு நிலையான நிறம் ஏது? மனிதனின் வாழ்க்கை என்ன? காலையில் களிப்புடன் கண் விழித்தவன், பகலில் கண் கலங்கச் கூடும். ஒருவேளை சிரிப்பவன் மறுவேளை அழுதிடக்கூடும். இ ன் று அறியாதவனாக இருப்பவன், நாளை அறிவாளியாகக் கூடும்.