பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

காரணம். உறுதியற்றவனுக்குத் தற்பெருமை கூடவே இருக்கும்.

உனக்கு எதில் திறமையும் வல்லமையும் இருக்கிறதோ அதில் முன்னேறு. ஆசைகளை உருவாக்கிக் கொள்வதே பலவீனத்திற்கு அடிப்படை. நீ விரும்பியது எதுவானாலும் அதில் உனக்குக் கிடைத்த வெற்றியைக் கண்டு மன நிறைவு கொள்ள வேண்டும். பெறமுடியாததை எதிர்காலத்தில் பெற்றிடுவோம் என்று ஆசை கொள்ளாதே. எப்போதும் உழைப்பால் கிடைத்ததைக் கொண்டு நிறைவடைவதே மகிழ்ச்சிக்கு வழி, நேர்மையும் ஒத்திணைவும் அற்ற உன் விருப்பத்திற்கு எல்லாம் இயற்கை ஒத்துழைக்கும் என்று நம்பிக்கை கொள்ளாதே. எப்போதும் முயற்சி இன்றி இன்பம் உன் காலடியில் விழுந்து கிடக்காது. புதுமைகளைக கண்டு களிப்பதற்கே நீ விருப்பம் கொள்வாய். ஆனால் நீ விரும்புவது என்று உன்னுடன் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். நல்லதை இழந்தால் நீ வருந்துகிறாய். ஆனால் அது உன்னுடன் இருந்தபோது அதை நீ புறக்கணித்து விட்டாய்.

நீ அடையும் வெற்றியைக் கண்டு மகிழ்கிறாய். பிறகு அதை ஏன் விரும்பினோம் என்று கவலைப்படுகிறாய். அப்படிச் செய்வதும் உன் குற்றமில்லை. வாழ்க்கைச் சூழ்நிலையே அதற்குக் காரணம்.