உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இலக்கியங்களில் பெற்ற அறிவையும் நன்கு செரிமானம் செய்து அண்ணன் த. கோவேந்தன் தந்துள்ள நூலே சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்' என்னும் நூல்.

வாழ்க்கை எவ்வளவு எளிமையானதோ-தெளிவானதோ அவ்வளவு எளிய-தெளிந்த நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அண்ணன தம் மொழிப் புலமையை இங்கே காட்டவில்லை. அடிப்படை அறிவுடையவரும் ஆழ்ந்து எண்ணிப் படிக்கத்தக்க வகையில எழுதியுள்ளார்.

நூலாசிரியா பாவேந்தர் பாரதிதாசனுடன் பழகியதாலும், அவர் எழுத்துகளில ஆழங்கால் பட்டதாலும் உவமைகளும-உருவகங்களும மின்னலின் பின்னலாக ஆங்காங்கே ஒளிர்கின்றன.

நேருக்கு நேர் நினறு பேசுவதுபோல் நம் நெஞ்சுக்குள் சொற்கள் சிறகடித்துப் பறக்கின்றன. உண்மையில் ஊன்றி அனபில் உறவாடத் தெரியாத நமக்கு உறவாண்மையை மேம்படச் செய்கிறார் ஆசிரியர்.

பட்டறிவினால் பெற்ற பாடங்கள் பக்கங்கள் தோறும் கொட்டிக் கிடக்கின்றன. உண்மைகள் ஒளிப் படங்களாக மனக் கண்முன்னே விரிகின்றன. எண்ணிய எண்ணியாங்கு எய்தத் திண்ணியராய்த்