பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

நீ ஏதும் அறியாத ஓர் அப்பாவியைக் கூடத் துன்புறுத்தியவன் ஆகிவிடுவாய்.

வீணாகக் கடுமையாகத் தொல்லைப்படுத்துவதன் மூலம், குற்றம் செய்யாதவன் கூடி, வலிமையும் கடுமையையும் தாங்க முடியாத நிலையில் எதையாவது இட்டுக்கட்டி உண்மையாகக் கூறக்கட்டும்.

ஒருவனைச் சாகடிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது காரணத்தைத் தேடிக் கண்டு பிடிக்காதே. அதைவிட அவனை நேராகச் சாகடித்து விடுவதே நல்லது.

அறத்தை நிலைநாட்டுபவர்களுக்கு உண்மைகளைக் கண்டறியும் ஆற்றல் இருக்க வேண்டும். உண்மை சில நேரங்களில் பகைமை உண்டாக்கும்; எதிரிகளை ஏற்படுத்தும். இருந்தும் உண்மையை மனிதன் நாடுவதே இயற்கை. உண்மை வெளிப்படும்போது சில நேரங்களில் அச்சமும் உண்டாகலாம். அது உண்மையில் குற்றமில்லை. அது உன்னுடைய குற்றமே. நின் குற்றங்குறைகளை நீ உணர்வதற்காகவே சிந்தனை உண்டாக்கப்பட்டது. இயற்கையுணர்வே உனக்கு நல்லதைச் செய்யக் கட்டியது. உன் உடல் வெறும் தூசி, சாம்பல். எவன் ஒருவன் தன் குற்றத்தை முதலில், உணர்கின்றானோ அவனே பிறரைக் காத்திட முடியும், சீர்படுத்தமுடியும்.