பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

பெற்ற மகனையே வெறுப்பவன் அநாகரிகமானவன். தந்தையின் சாவை வரவேற்பவன் மாந்தன்மையற்றவன்.

மனிதனுக்குப் பல கேடுகள் உள்ளன. வருந்துவதன் மூலம் கேடுகள் அதிகமாகின்றன. எல்லாக் கேடுகளைவிட துன்பமே பெரிது.

அது உலகத்திற்கே பொதுவானது. மகிழ்ச்சி ஒரு விருந்தாளியைப் போல வரும்போதும் துன்பத் தைக் கடந்து இன்பமாக எப்போதும் வாழ ஆசைப்படு.

மகிழ்ச்சி ஒவ்வொன்றாக வரும். துன்பம் விரைவாகப் படைபோல வரும்.

வைக்கோல் தீயில் விரைவாக மறைந்து விடும். இன்பமும் அப்படியே. பெற்ற இன்பம் எங்கே என்று தவிக்க நேரிடும். கவலைகள் அடிக்கடி தோன்றும். மகிழ்ச்சி எப்போதோ தோன்றும். வலியும் வேதனையும் தாமாக வரும். இன்பத்தைத் தேடித்தான் பெறவேண்டும். அறவழியில் வரும் இன்பம் நிலைக்கும்.

எதையும் சிந்தித்துப் பார்க்க மனிதன் கடமைப்பட்டவன். மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பவன் இதை மறந்து விடுகிறான்.

துன்பம் வரும் என்பதையும் மனிதன் அறிவான். துன்பம் எப்போது நீங்கியது என்பதையும் அறிவான். வேதனைக்குரிய செயலில் ஈடுபடும்போது அதை நினைக்க மறந்து-