பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

உன் தாயார் அடங்காப்பிடாரியாக இருந்தாலோ, உன் மனைவியிடம் குறை காணப்பட்டாலோ, நீ அதற்காக வருத்தப்பட்டுப் பயன் இல்லை. மற்றவர்கள் புரிந்திடும் குற்றம் குறைகளுக்கு நீ எப்படிப் பொறுப்பாளி?

உன்னிடம் உள்ள தங்க நகைகளைப் புறக் கணிக்காதே. பிறரிடம் இருப்பதை உயர்வாக மதிக்காதே.

உனக்கு அதிகாரம் இருப்பதாலோ, உயர்நிலையில் இருப்பதாலோ, மனைவியைக் குறைத்து மதிப்பிடாதே. அவளை நீ அடைய எது காரணம்? அவள் நின்னிடம் கொண்ட நம்பிக்கையல்லவா? உன்னை ஒழுக்கமுடையவன் என்று அவள் தன்னை ஒப்படைத்துக் கொண்டதை மறக்காதே. நீ அவளை உண்மையாக விரும்பி அடைந்திருந் தால், நீ அவளைப் புறக்கணிப்பது கண்டு நின் உள்ளமே வருத்தப்படும்.

உன் நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பை அவன் கண்ணிர் விடுவதைத் கொண்டு மதிப்பிட இயலாது. அதைவிட அதிகமான இழப்பை அவன் அடைந்திருக்கிறான். அதை அவன் வெளிப் படுத்திக் கொள்ள வழி இல்லை.

ஆரவாரமாக நாலுபேருக்குத் தெரியும்படி செய்யப்படும் செயல்களை அதிகமாக மதிப்பிட்டு விடாதே. நல்ல பல பெரிய செயல்கள் ஒசையின்றி நடைபெறும்.