பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

85

ஒருவன் செய்திடும் நல்ல செயல்களுக்குப் போலி காரணங்களைக் கற்பித்து விடாதே. உலகம் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ளும்; நின் பொறாமையும் வெளிப்பட்டு விடும்.

புகழுரைகள் செவிகளை மகிழ்விக்கும், அமைதி நெஞ்சத்தை மகிழ்விக்கும்.

அன்பு செலுத்த அதிகம் ஆர்வம் காட்டு, வெறுப்பு கூடாதது, நின்னைப் பிறர் உவந்தேற்க இதுவே வழி.

பாராட்ட வேண்டியதை உடனே பாராட்டு. கண்டிப்பதற்கு விரைவு காட்டாதே. நல்லதைச் செய்வதற்குத் தயங்காதே. தீமை செய்யவதைத் தவிர்த்து ஒதுக்கிவிடு. நேர்மையாகச் சிந்தித்து முடிவு செய்த பின்னர் எவ்விதத் தயக்கமும் கொள்ள வேண்டா. அறிவாளிகள் நின்னைக் குறை கடறினால் அதை வரவேற்பாய்; குறைமதி படைத்தோர் கைதட்டி ஆரவாரம் செய்தால் மயங்கிவிடாதே.

நினக்குத் தகுதி இல்லாத பதவியை வகிக்காதே. அந்தப் பதவிக்குத் தகுதி படைத்த வர்களின் ஏளனத்திற்கு ஆளாக நேரிடும்.

நெஞ்சுக்குச் சரியாகத் தெரியாததைப் பிறருக்குப் புகட்டாதே.

மாற்றார் நலமாக முன்னேறி இருப்பதைக் கண்டு பொறாமைப்படாதே. நின் எதிரிக்கக்கூட