பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

நல்லதையே நினை. பகைவர்கள் துன்பப்படுவதைக் கண்டு மகிழ்வு அடையாதே.

எல்லோருக்கும் நல்லதையே செய். அனைவரின் அன்புக்கும் உரியவனாக இரு.

ஊகித்தல்

இழிவும், இருமாப்பும் விரும்பதக்கதல்ல. இத்தகாத குணங்கள் இருப்பது இடர்ப்பாட்டில் முடியும்.

ஊகித்தல் என்பதே சிந்திககும் ஆற்றல் குறைந்திருப்பதைக் காட்டுவதாகும். ஊகித்தல் பல வேளைகளில் தவறுகளுக்கு வழி வகுக்கும்.

தன்னைப்பற்றி ஒருவன் மீவுயர்வாகவே கருதிக் கொள்வோன், பிறரை இழிவாகவோ தாழ்வாகவோ மதிப்பிடுவான்.

மூடநம்பிக்கையும், போலி பத்தியும் நாம் அறியாததை ஆய்வு செய்யும்போதும் ஏற்படுகின்றன.

உயிர்ப்பாற்றல் (Life force) இல்லை என்று. கூறுபவன் இடியை எதிர்த்து நிற்பவன்.

உயிர்ப்பாற்றலின் அருள் பெற்றவன் நான் என்று பெருமையாகப் பேசுபவன், இயற்கையைப் போற்றிப் புகழ்ந்து, ஒன்றி வருவதில் தவறக் கூடாது.