இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
தெளிந்தவராய் விழிப்புணர்வுடையவராய் நம்மை-நம் உள்ளுணர்வைத் தட்டி எழுப்புகின்றன. இந்நூல்.
- ஒருபொழுதும் வாழ்வதறியார்,
- கருதுய-கோடியும்
- அல்ல பல!
- கருதுய-கோடியும்
என்ற குறளுக்கு ஏற்பவே நம்மில் பலரும் வாழ்கிறோம். வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத கூறு எப்படி வாழவேண்டும் என்பதே. அவ்வாறு வாழவேண்டிய வழிவகைகள், நெறிமுறைகள் பற்பல அல்ல, சிலவே. அவற்றைத் தொகுத்து வகுத்துத் தந்துள்ளார் அணணன் த. கோவேந்தன்.
பொதுவாக இந்நூல் உலகில் நலவாழ்வு வாழ்ந்த வர்களின் சாறமும திருக்குறளின சாறமும் இணைந்து பிணைந்துள்ளது நாட்டுச் சேவல் காலை ஞாயிற்றின் வருகையை எப்படி எக்காளமிட்டுக் கூவி அறிவிக்குமோ அப்படியே வையத்துள் வாழ்வாங்கு வாழ அழைக்கிறது இந்நூல் நாமும் வாழ்ந்து காட்டுவோமே.