பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

89

வயற்றில் புதைந்திருக்கிறது. உனக்குத் தேவை மூலிகைகள், கனி வகைகள், உணவுப் பொருள்கள் மண்ணின் வயிற்றில் மறைக்கப்பட்டு இல்லை.

அறிவாளிக்குச் செல்வம் ஓர் அடிமை. செல்வத்திற்கு அவன் அடிமையாக மாட்டான். செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவாதவன், பிணியால் பீடிக்கப்பட்டு அல்லல்படுவான்.

தங்கத்தால் எத்தனை கோடி பேர் அழிந்தார்கள்! செல்வம் ஒழுக்கத்தை உண்டாக்க முடியுமா? பூரியர்களிடம் இருப்பது செல்வம். நீ அந்தச் செல்வத்தை விரும்புவதால் என்ன மேன்மையைத் தேடிக்கொள்ளப் போகிறாய்?

நீ செல்வத்தைச் சேர்க்க அதிக ஆசைகொண்டால் பிறருக்கு அதைப் பகிர்ந்து கொடு. பிறரை மகிழ்விப்பதில்தான் உனக்கும் பெருமகிழ்ச்சி உண்டாகும்.

செல்வத்தை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைப்பதால் ஒரு பயனும் இல்லை. செல்வத்தைப் பயன்படுத்தாமல் முடக்கி வைப்பவன். ஏழைகளின் வளத்தைச் சூரையாடுபவன்.

செல்வத்தை உரிய முறையில் செலவிடத் தயங்குபவன் நல்லனவற்றைப் புறக்கணிப்பவன். தன் மகிழ்ச்சியையே குறைத்துக் கொள்பவன்

செல்வம் இல்லாமல் வாழ்வது ஒன்றும் கடினமில்லை. பெரும் செல்வத்தோடு வாழ்வதும் எளிதில்லை.

சி-6