பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

உழைக்கும் ஏழையால் தன்னை எளிதில் கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது. மிகுதியான செல்வம் படைத்தவனுக்குத் திண்டாட்டங்கள், கவலைகள் அதிகம், இரக்கமற்றவனாக, அன்பற்றவனாக, அறிவற்றவனாக வாழ்வது ஒரு பெரிய சமூகக் குற்றம். ஆம்; செல்வர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்.

முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கும் உதவியைச் செய்திடு. உனக்கு எப்படி தேவைகள் இருக்கின்றனவோ, அதே போலத்தான் மற்றவர்க்கும் தேவைகள் இருக்கும். உன்னிடம் இருந்தது, இல்லாத நிலையில் உனக்கு ஒரு. மகிழ்ச்சி உண்டாக்கும்.

பழி தீர்க்கும் குணம்

பழி தீர்க்க நினைப்பதே மனிதனின் குறைபாடு - இழிவானவனுக்கும், கோழைக்கும்தான் அந்த எண்ணம் ஏற்படும்.

பிடிக்காதவர்களைக் கொடுமைபடுத்துபவன், திருட்டுக்காகக் கொலை செய்பவன், ஈனப் பிறவிகள். புண்படுத்த வேண்டும் என்று நினைப்பதே பழிதீர்க்கத் தூண்டும் கருவியாகும். அதை நினைக்கவே உயர்ந்தவர்கள் வேதனை கொள வார்கள்.

உனக்குத் தீங்கு செய்ய நினைப்பவனைப் புறக்கணித்து விடு. அதுவே உன் அமைதிக்கு வழி. தீய உணர்ச்சிகள் பழிதீர்க்கத் தூண்டும்.