பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

வருந்துவது இயற்கைக்கு முரணானது. இயற்கை மனிதனை இரக்கமுள்ளவனாகவே படைத்தது. நீ எப்போதும் நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே உன்னைப் படைத்தது, ஏதும் அறியாத நிலையில் மனிதன் மகிழ்வாக இருக்கிறான்.

மனிதர் தமக்குத் துன்பம் ஏற்படும்போது மெய்ப்பொருளைக் குறைத்துப் பேசவும் முணுமுணுக்கவும் செய்கிறான்.

மாற்றங்கள் இயற்கை. அதை நன்கு உணர்ந்த பிறகு நீ ஏன் அழுகிறாய்? இயற்கையின் சட்டங்களை நீ அறிந்தால் வருத்தப்பட் வேண்டியதில்லை. இயற்கைக்கு முரணாக நீயே சட்டங்களை உருவாக்கிக் கொள்வதனால் உனக்குத் தொல்லைகளும், துன்பமும் உண்டாகின்றன. இயற்கையின் சட்டங்கள் உன்னையும் பாதிக்கும்போது வருத்தப்பட்டுப் பயன் ஏதும் இல்லை. வருத்தப்படுவதால் இழந்ததைப் பெற முடியாது. மனக் கவலையை அகற்றுவதற்காக வருந்துவது, மேலும் துன்பத்தை மிகுதிப்படுத்தும். நெஞ்சத்தைத் தாக்கிய அம்பு அகற்றுவதுபோலத் தோன்றினாலும், அது அம்பை மேலும் ஆழமாகத் தைத்திடும். எனவே, கவலை கொள்ளாதே. துன்பம் நண்பர்களைப் பிரித்திடும். தனியே துணையின்றி மூலையில் முடங்கிக் கிடந்து துன்பப்பட நேரும்.

துன்பம் நேரும்போதுதான் நீ தெளிவாகவும், துணிவாகவும், விழிப்பாகவும், உறுதியாகவும்