பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

97

இருக்க வேண்டும். உன்னை நீ மனிதனாகக் காட்டிக்கொள்ள வேண்டும். துன்பத்தின் காரணங்களை ஆய்ந்து களையவேண்டும்.

கண் கலங்கிக் கண்ணிர் சிந்துவது உள்ளத்தின் உயர்வான குணத்தைச் சிதைத்து விடாது. கண்ணிர் சிந்த என்ன காரணம் என்பதைச் சிந்தித்துத் தெரிந்துக்கொள். வெளிவரும் கண்ணிர் குறையும்.

எவ்வளவு கண்ணிர் சிந்துகிறார்கள் என்பது நிகழ்ந்த கேட்டின் உண்மை நிலையினைத் தெரிவிக்காது. மனிதனின் மனத்தைக் குலைப்பது கவலை. கவலையோடு இருப்பவன் உயர்ந்த செயல்களைச் செய்திட முற்படமாட்டான்.

தீயவற்றைப் புறக்கணித்து ஒதுக்கிவிடு, தீயசெயல்களுக்காக உன் ஒழுக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாதே.

பெருந்தன்மை

பெருந்தன்மை உள்ளத்தில்தான் உள்ளது. நல்லவனாக நடந்து கொள்வதில்தான் மதிப்பும் மரியாதையும் அடங்கியுள்ளன.

குற்றங்கள் புரிபவன் தன்னை உயர்த்திக் கொள்ளமுடியாது. மரியாதை, மதிப்பைப் பெற முடியாது. தங்கம் ஒருவனை நல்லவனாகஉயர்ந்தவனாக உயர்த்தி விடாது.