பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


அழைத்தார். மணி, வைத்தி, கமலா, சரோஜா, ரங்கு, உஷா-ஆறு பேரும் அவர் பின்னே சென்ருர்கள். அரை நிமிஷம் கழித்து ராமலிங்கம் மட்டும் உள்ளே வந்தார். பாய்ந்து கட்டிலருகில் போய், செல்லம்மாளின் காலடியில் நின்று கொண்ட அவருடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது; உடல் நடுங்கிற்று. அவர் மனத்தில் அடைபட்டுக் கிடந்த உணர்ச்சிக ளெல்லாம் உடைப்பெடுத்துக் கண்ணிர்ப் பிரவாகமாய்ப் பெருக ஆரம்பித்தன. ராமலிங்கம் தம் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு உடல் குலுங்க, உள்ளம் குலுங்க அழுதார். செல்லம்மாள் திடீரென்று ஒரு தடவை புரண்டு விட்டுக் கண் விழித்தாள். அதே சமயம் ராமலிங்கம் தம் கைகளுக்குள் புதைந்திருந்த முகத்தை நிமிர்த்திப் பார்த் தார். மறுகணம், “ என் அருமைச் செல்லம்மா ! என் ஆன மன்னிப்பாயா ?” என்று கதறிக் கொண்டே அவள் காலடியில் விழுந்து, அவளுடைய இரு பாதங்களையும் எடுத்துத் தம் முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். செல்லம்மாளின் உடல் முழுவதிலும் மின்சார வேகத்துடன் புது சக்தி ஒன்று பாய்ந்தது. ஐயோ, நான் எங்கிருக்கிறேன்?’ என்று தினமான குரலில் கேட்டாள் அவள். நாற்பது வருஷங்களுக்குப் பிறகு முதல் தடவையாக இன்று தனது அறுபத்தேழாவது வயதில், அதுவும் மரணப் படுக்கையில், அவள் கணவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து இன்பம் பெற்ருள். 漆 涤 杀。 அருமையாகத் துவங்கிய மண வாழ்க்கை அது. ராமலிங்கத்தை அவருடைய அறிவுக்காகவும், ஆண்மைக் காகவும் கணவகைத் தேர்ந்து கொண்டவள் செல்லம்மாள். ஆரம்பத்தில் அவர்களுக்கு, மண வாழ்க்கை இன்ப மயமா யிருந்தது; இருவர் உள்ளங்களிலும் ஒருவித இன்னிசை