பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது. நம் திருமணத் தின் வெள்ளி விழாவையும், பொன் விழாவையும், புதிதாக மறுபடி நாமிருவரும் கல்யாணம் செய்து கொண்டு ஊர் அழைத்துக் கொண்டாட வேண்டும் ' என்று ராமலிங்கம் செல்லம்மாளிடம் அடிக்கடி சொல்லுவார். முதலில் வைத்தியும், பின்பு கமலாவும் பிறந்கார்கள். கமலா பிறந்தபோது தான் ராமலிங்கம் பெரிய உத்தியோகம் ஒன்றில் ஊன்றி நின்றிருந்தார். அங்கே மேன்மேலும் பெயர் பெருகிற்று. கமலா பிறந்தபோது பதவியில் அவருக்கு உயர்வு கிடைத்திருந்தது. கமலா அதிர்ஷ்டக் காரி என்று பெயர் வாங்கினுள். அதற்கப்புறம் நாலைந்து வருஷங்களுக்கு நல்ல சுக்கிர தசை அடித்தது. உத்தியோகத்தில் அவர் தொட்ட தெல்லாம் பொன்னுயிற்று. பதவி எப்படி யெல்லாமோ உயரப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், ஒரு நாள் ராமலிங்கம் வேலையை விட்டு விட்டார். அவர் ஏன் இவ்வளவு அருமையான உத்தியோ கத்திலிருந்து விலகினர் என்பது யாருக்கும் தெரியாது. ஏன், அவருக்கே தெரியாது. இந்த மாதிரி ஒரு மனநிலை எல்லோருடைய வாழ்க்கை யிலும் ஏதாவதொரு சமயம் ஏற்படத்தான் செய்யும் என்று தோன்றுகிறது. பணம், அந்தஸ்து, சூழ்நிலை-எல்லாம் அளவுக்கு மிஞ்சித் திருப்தியளிக்கக் கூடியதாய் இருக்கும் ; ஆல்ை மனத்தில் திருப்தியிராது. தாங்க முடியாத குறை ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றும். இந்த மாதிரி ஒரு மன நிலைக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தான் ராமலிங்கம் அவ்வளவு நல்ல பதவியை உதறித் தள்ளி யிருக்க வேண்டும். செல்லம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனல் தன் கணவர் செய்தது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்ற நினைப்பில்.சும்மா இருந்து விட்டாள். ராமலிங்கம் வேலையை விட்டு மாதம் இரண்டாயிற்று. புதிய வேலை ஒன்றும் அவரைத் தேடி வராததால் அவரும்