பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


கொண்டு வருவார் பார், அதுவரை காத்திருந்து அவரிடமே அந்தப் பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு போ.போதும் எனக்கு......” கடைசி வார்த்தைகள் நாக்கை விட்டுப் பிரிந்து கொண்டிருந்த போதே, செல்லம்மாள் தன் பார்வையின் விளிம்பில் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அங்கே ராமலிங்கம் நின்று கொண்டிருந்தார். ராமலிங்கத்தைக் கண்டவுடன் அவள் நடுங்கிப் போள்ை. பாய்ந்து ஓடி ராமலிங்கத்தின் காலடியில் சுருண்டு விழுந்தாள். ராமலிங்கம் விலகிக் கொண்டார். செல்லம்மாள் எழுந்து அப்படியே, குன்றிப் போய் நின்று அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவருடைய முகத்தில் சற்றும் மாறுதலில்லை. ' ஐயோ, அந்த வார்த்தைகள் நிஜமாகவே என் வார்த் தைகளில்லே ; உங்கள் செல்லம்மாளின் வார்த்தைகளில்லை. அவை என் வாயிலிருந்து எப்படி வந்தன என்பது என் மனத்துக்கே தெரியாது. என்னே நம்புங்கள்’ என்று கை கால் பதற அவள் கெஞ்சிள்ை. ராமலிங்கம் அப்போதும் கோபித்துக் கொள்ளவில்லை. ஆணுலும் அவர் மனத்தில் பற்றிக் கொண்ட நெருப்பு, வார்த்தைகளாக வெளி வந்தது, அமைதிப் பூச்சுடன். ' செல்லம்மா, உன் மனத்தை அறிந்து வெட்கத்தால் குன்றிப் போகிறேன். எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. நீ தான் என் கண் களைத் திறந்து விட்டாய். இனி என் கடமையைத் தவருமல் நான் செய்தாக வேண்டும்...” என்று சொல்லிக் கொண்டே, பக்கத்திலேயே இருந்த தம்முடைய பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். செல்லம்மாள் அவர் பின்னலேயே ஒடிப் போய், " ஐயோ, எங்கே கிளம்புகிறீர்கள்?’ என்று கத்தினுள். ராமலிங்கம் ஒரு உதறு உதறித் தம்மை அவளுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, செல்லம்மா, நான் 27–8 * -