பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


திரும்பி இந்த வீட்டுக்கு வரவேண்டுமென்ருல், என்னே நீ தடுக்காதே!’ என்று சொல்லிவிட்டு, விடுவிடென்று போய் விட்டார். மூன்று நாள் கழித்துத் திரும்பி வந்து சேர்ந்தார் அவர். அவளை நேராகக் கூடப் பார்க்காமல் பேசினர். 'இன்னும் இரண்டு நாளில் நாம் இங்கிருந்து வேறு ஊருக்குப் போகிருேம்.’’ மேற்கொண்டு ஒரு தகவலும் கிடையாது. சாப் பாட்டை அரையும் குறையுமாகக் கொரித்து விட்டு, மூட்டை கட்டக் கிளம்பி விட்டார். செல்லம்மாள் என்ன வெல்லாமோ பேசிப் பார்த்தாள். எதற்கும் ஒரே வார்த் தையில் பதில் சொல்லி விட்டு வேலையில் முனைந்திருந்தார் ராமலிங்கம். புது ஊர் போய்ச் சேர்ந்த போதுதான், செல்லம் மாளுக்கு ராமலிங்கம் அந்த மூன்று நாளில் செய்திருந்த ஏற்பாடுகளெல்லாம் தெரிய வந்தன. பெரிய தொழிற்சாலை ஒன்றில் உயர்ந்த உத்தியோகம் ஒன்று அவருக்குக் கிடைத் திருந்தது. தொழிற்சாலைப் பகுதியிலேயே பெரிய பங்களா ஒன்றை அவருக்காக ஒதுக்கி யிருந்தார்கள். யந்திர நுட்பத்தில் பெரும் பயிற்சியெல்லாம் முடித்து நிபுணரா யிருந்ததால், அவரை அந்தத் தொழிற்சாலே முதலாளி விசேஷச் சலுகையுடன் ஏற்றுக் கொண்டிருந்தார். புது ஊர் போய்ச் சேர்ந்தபின், ராமலிங்கம் வீட்டில் தங்காமல் தொழிற்சாலையிலேயே பழியாய்க் கிடந்தார். குழந்தைகளே மட்டும் அழைத்துக் கொண்டு அடிக்கடி வெளியில் சுற்றுவார். செல்லம்மாளுடன் அளந்துதான் பேசுவார். அவளை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்று தாம் வைராக்கியம் பூண்டு விட்டதாக அவர் ஒரு நாள் வெளிப் படையாகச் சொல்லியே விட்டார். ' பத்து வருஷங் களுக்குப் பொறுப்பில்லாமல் வாழ்ந்தாயிற்றே ! அது போதும். இனி குழந்தைகள்தான் நம் இருவருக்கும் இடை யிலுள்ள ஒரே பிணைப்பு. மண வாழ்க்கை என்ற அர்த்த மற்ற வாழ்க்கை வேண்டாம்; இனிமேல் பண வாழ்க்கை