பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


ராமலிங்கமும் குழந்தைகளுடன் ஒன்றி விட்டார். அவர் களுடைய வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் திட்டங்கள் வகுத்து அனேத்தையும் நிறைவேற்றி வைத்தார். இப்படிப் பல வருஷங்கள் ஓடின. திருமணத்தின் வெள்ளி விழா வந்து போயிற்று. அன்று செல்லம்மாளின் மனம் துடித்த துடிப்பு, யாருக்குத் தெரியும் ? வெளி உலகத்துக்குத் தெரியாமல்-குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல்-இந்த வைராக்கிய வாழ்க்கை மேலும் ஐந்து வருஷம் நீடிப்பதற்குள், கமலாவுக்கும், வைத்திக்கும் அடுத்தடுத்துக் கல்யாணம் நடந்தது. வைத்திக்கு தாம் வேலை பார்த்த தொழிற்சாலையில், தமது பதவியிலேயே அமர்த்துவதற்கு, ஆரம்ப முதலே அவனைச் சரியானபடி தயார் செய்து வைத்திருந்தார். கல்யாணத்துக்குப் பின் வைத்தி, சரோஜாவுடன் அங்கேயே மண வாழ்க்கை நடத்தத் துவங்கினது, ராமலிங்கத்துக்கு இதமாயிருந்தது. அறுபதாவது வயதில் ராமலிங்கம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். முப்பது வயதில் இருந்த அதே உடலுறுதியுடன் அவர் ஓய்வு பெற்றுக் கொண்டது வினுே:தமா யிருந்தது. ஆனல் தொழிற்சாலையுடன் தமக் கிருந்த தொடர்பை அவர் அப்புறமும் பூராவாக விட்டு விடவில்லை. இது எல்லோருக்கும் திருப்தியளித்ததுசெல்லம்மாளைத் தவிர. ஆனல் அவள் மட்டும் ஏதோ ஒரு கொள்கையை ஸ்தாபிக்கப் போகிறவள் போல் உறுதியுட னிருந்தாள். முப்பது வருஷ ஒற்றை வாழ்வு அவளைச் சுட்ட பொன்னுக்கி யிருந்தது. உஷாவும், ரங்குவும் பிறந்தது செல்லம்மாளின் வாழ் வுக்குப் புது ஒளி ஊட்டிற்று. உயிர் வாழவேண்டுமென்ற உறுதி, அவர்கள் வருகையால் மேலும் வலுப்பட்டது. உஷாவின் வளர்ச்சியை நாள்தோறும் நேரில் கண்டு செல்லம்மாளின் கண்கள் குளிர்ந்தன. கமலாவும் கணவன் வீட்டிலிருந்து ரங்குவுடன் அடிக்கடி வந்து போய்க் கொண் டிருந்தாள். -