பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 C 1 இப்படி ஒரு தடவை கமலாவும் ரங்குவும் வந்திருந்த போது, கூடத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தார்கள். ராமலிங்கம் அடுத்த அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். வைத்தி பேச்சுவாக்கில், தான் ஆபீஸ் அலுவலாக வெளியூர் போக வேண்டியிருக்கும் என்று செல்லம்மாளிடம் சொன்னன். உடனே செல்லம் மாள், எப்போது போகவேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு வைத்தி, ' ஏப்ரல் பதினேந்தாம் தேதி தான் போக வேண்டும். இன்று நாலாம் தேதிதானே! இன்னும் ......” என்று சொல்லி முடிப்பதற்குள், செல்லம்மாள், "ஆ, இன்று ஏப்ரல் நாலாம் தேதியா ?’’ என்று கூச்சல் போட் டாள். எல்லோரும் திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினர்கள். " ஏப்ரல் நாலாம் தேதி! ... வைத்தி, எனக்குக் கல்யாண மாகி இன்ருேடு ஐம்பது வருஷமாகிறதடா...பொன் விழா" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் மூர்ச்சையானுள். அன்று முதல் செல்லம்மாள் படுத்த படுக்கையாளுள். ராமலிங்கம் தவியாய்த் தவித்தார். பிரபல டாக்டர்கள் பலரைக் கொண்டு வந்து காண்பித்தார். பனம் தண்ணி ராய்ச் செலவழிந்தது. செல்லம்மாளுக்கு ஏதோ திகிலடித்து விட்டது என்று டாக்டர்கள் சொன்னர்கள். ஆளுல் உண்மையில் ராமலிங் கத்துக்குத் தான் திகிலடித்து விட்டதோ என்று தோன் றிற்று. செல்லம்மாளின் கட்டிலருகிலேயே இரவு பகலாக உட்கார்ந்திருந்தார். செல்லம்மாள் தூங்கும் போது அவளேயே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பார். ' செல்லம்மா! உன் அருகிலேயே தவம் கிடந்து உன்னே மறுபடி அடைந்தே தீருவேன் ’’ என்று அவர் மனத்தில் ஓர் ஒலம் கேட்டது திடீரென்று. அந்த ஒலம் வர வர உரத்து, அவருடைய இதயத்தின் ஒவ்வோர் அணு. விலும் எதிரொலித்தது. செல்லம்மாள் தான் விழித்திருந்த போதெல்லாம். அவரைப் பார்க்கவும் அஞ்சிள்ை ; அவள் உண்மையில்