பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(0) அவரைப் பார்க்க விரும்பவேயில்லை. தவறிப்போய் வெளி வந்த சில வார்த்தைகளுக்காக நாற்பது வருஷ காலம் தன்னை அவர் தண்டித்து விட்டாரே என்பதுகூட முக்கியமா யில்லே , மண வாழ்வின் துவக்கத்தில் எத்த னேயோ கனவுகளுக்குக் காரணமாக இருந்த வெள்ளி விழாவும் பொன் விழாவும் கொண்டாட்டமில்லாமலே வந்து போய் விட்டன; இரண்டு பேரும் உயிரோடு இருந்தும் கொண்டாட முடியவில்லை. இந்த எண்ணம் தான் செல்லம் மாளே வெகுவாக வதைத்தது. செல்லம்மாள், தன் அறுபத் தேழாவதுவயதில், தன் மண வாழ்வின் பெரும்பகுதி வீணுகி விட்டது பற்றிய பெருந் துயரத்துக்குத் தன்னைப் பலியாக்கிக் கொண்டிருந்தாள். மாப்பிள்ளை மணியும் ஊரிலிருந்து வந்து சேர்ந்தான். எல்லோரும் எப்போதும் செல்லம்மாளின் படுக்கையைச் சுற்றியே உட்கார்ந்திருந்தார்கள். ராமலிங்கம் வாய் திறந்து யாருடனும் பேசாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு தவித்துக் கொண்டிருந்தார். அவர் உடம்பு நாளுக்கு நாள் தளர்ந்து வந்ததை எல்லோரும் பார்த்தார்கள். அவ ருடைய மனம் வலுவிழந்து, உருவிழந்து சிதறிக் கொண் டிருந்ததை யாரும் பசர்க்கவில்லை. அது அவருக்கு மட்டும் தான் தெரியும். முடிவில் ஆஸ்பத்திரியிலே, ஸ்பெஷல் வார்டில் செல்லம்மாளேச் சேர்த்தார்கள். அங்கே சேர்த்த பத்து நாட்களுக்குள் ராமலிங்கத்தின் நம்பிக்கை யெல்லாம் போய். விட்டது. இனி செல்லம்மாள் பிழைக்கமாட்டாள்? என்பது தெரிந்து போயிற்று. இப்போது அவர் மனத்தில் ஒரே ஒரு விருப்பம் தான் மிஞ்சி யிருந்தது. செல்லம்மாள் நல்ல நினேவுடன் இருக்கும்போது, தன் பாபத்துக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்பதுதான் அது செல்லம்மாளுக்கு நினைவு வந்து வந்து போய்க்கொண் டிருந்தது. ஒவ்வொரு தடவையும் நினைவு வரும்போது, ராமலிங்கம், அவள் காலேப்பிடித்துக் கதறியழுது மன்னிப்புக்