பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f Q3 கேட்கத் துடிப்பார். எழுந்தும் விடுவார். ஆளுல் கடைசி திமிஷத்தில் தைரியம் வராது. அதற்குள் செல்லம்மாள் நினைவிழந்து விடுவாள். அடுத்த தடவை நிச்சயம் ” என்று சொல்லிக் கொள்வார். ஆளுல் அவள் முடிவு இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று அவர் நினைக்கவே யில்லே. கணவனின் ஸ்பரிசம்பட்டு, ஆனந்த மிகுதியால் செல்லம்மாளுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. படுத்த வாக்கிலேயே நாற்புறமும் பார்த்தாள். கால் பக்கத்தில் கணவன் இருந்ததைப் பார்த்தவுடன், பதறிப் போய் ' ஐயையோ, என் காலே நீங்கள் தொடலாமா? இங்கே என் அருகில் வாருங்கள் ' என்று முணுமுணுத்தாள். ராமலிங்கம் முன்னே தாவி வந்து அவளே அணைத்துக் கொண்டு, ' நாற்பது வருஷ காலத்துக்கு விட்டுப்போ ன இன்பமெல்லாம், உன்னுடைய இந்த ஓர் அழைப்பில் எனக்குக் கிடைத்துவிட்டது செல்லம்மா!' என்று கதறினர். செல்லம்மாள், ' இனி நான் நிறை வாழ்வு வாழ்ந்த நிம்மதியுடன் உயிர் விடலாம்...' என்ருள் நா தழுதழுக்க. ராமலிங்கம் செல்லம்மாளின் வாயைப் பொத்தினர். திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றிற்று. ' செல்லம்மா, நம் கல்யாணத்துக்குப் பொன் விழா கொண்டாட வேண்டாமா ? மறுபடி நாம் ஊரறியக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமா, கொட்டு மேளத் தோடு ?’ என்று கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும் கேட்டார். செல்லம்மாளின் உடலில் இவ்வளவு சக்தி எங்கிருந்து வந்தது திடீரென்று ? முகத்தில் இவ்வளவு தெளிவு எப்படி வந்தது? உரக்கச் சிரித்துக் கொண்டே, ! உங்களே எத்தனை தடவை வேண்டுமென்ருலும் கல்யாணம் செய்து கொள் கிறேன். என் இஷ்டத்தை வேறு கேட்க வேண்டுமா? என் உயிர் நிச்சயம் போகாது. இந்த ஆனந்தத்துக்காக இந்த நாற்பது வருஷமும் உயிரைப் பிடித்து வைத்துக்