பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


கொண்டிருந்தவள், இப்போது அதைப் போகவிடுவேளு?” என்ருள் உணர்ச்சி மிகுதியில். ‘' வைத்தி!...... கமலா!...... நம் செல்லம்மா பிழைத்து விட்டாள் ” என்று கத்திக்கொண்டே ராமலிங்கம் கதவுப் பக்கம் ஒடிஞர். உண்மையாகவே செல்லம்மாள் பிழைத்து எழுந்து விட்டாள். எந்த உறுதியைக்கொண்டு நாற்பது வருஷமாக உயிரோடு இருந்தாளோ, எந்த உறுதியைக்கொண்டு இந்த முப்பது நாட்களாய்க் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாளோ, அதே உறுதியுடன் மரண த்தைத் துறந்து பிழைத்தெழுந்து விட்டாள். மறு மாதமே, மேளதாளம் முழங்க, வேதமந்திரம் ஒலிக்க, ராமலிங்கமும், செல்லம்மாளும் மறுமணம் செய்து கொண்டார்கள். சுமார் ஐம்பது வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஏற்பட்ட அந்த இன்பம், சற்றும் குறையாமல் இன்றும் அவர்களுக்கு ஏற்பட்டது !