பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O6 வேப்பமரத் தடியில் நின்றிருந்தார் பேராசிரியர் சிற்சபேசன். கிராமத்தின் அழகிலும், துய்மையும், அமைதியும் நிறைந்த அந்தக் காலே நேரத்துச் சூழ்நிலையிலும் தோய்ந்து நின்ற அவர் மனத்தில் வளமான சிந்தனைகள் உண்டாயின. பின்னுல் யாரோ நடந்து வருகிற ஓசை கேட்டுத் திரும் பினர் சிற்சபேசன். கையில் கூடையும் விளக்குமாறுமாக ஒரு சிறுமி வந்து கொண்டிருந்தாள். அவர் நின்று கொண் டிருந்த வேப்ப மரத்தடியை நோக்கித்தான் வருவதாகத் தோன்றியது. 'மாமா......! நீங்கதான் இந்த வீட்டுக்குப் புதிதாகக் குடி வந்திருப்பதாகச் சொன்னுங்க. நான் வீடெல்லாம் தெளித்துப் பெருக்கிச் சுத்தமா வைத்துக் கொள்வேன். வீட்டிலே சமையலுக்கு உதவியா எடுபிடிக் காரியமெல்லாம் செய்து கொடுப்பேன். சம்பளம்னு பெரிசா ஒண்ணும் கேட்க மாட்டேன். ஏதோ உங்களாலே முடிஞ்சதைக் கொடுத்தால் திருப்தியா வாங்கிக் குவேன். எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. ஒரு தம்பி இருக்கான். எலி மெண்டரி ஸ்கூல்லே அவன் மூணுங் கிளாஸ் படிக்கிருன். நான் உழைச்சுத் தான் காப்பாற்றி யாகணும்.’’ சிற்சபேசனுக்கு முன்னுல் வந்து நின்று கொண்டு பணிவான குரலில் கூறினுள் அந்தச் சிறுமி. அழுக்குச் சிற் ருடையும் கிழிந்த தாவணியுமாக ஏழைமைக் கோலத்தில் நின்ற அந்தச் சிறுமியை நன்ருய்ப் பார்த்தார் சிற்சபேசன். பதின்மூன்று அல்லது பதினுலு வயது மதிக்கலாம். வயதுக்கு மீறின வளர்த்தி. குச்சி போல் வளர்ந்திருந்தாள். எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தது போன்ற முகத் தோற்றம். ஆனுலும் பார்த்தவுடன் மனத்தில் பதிந்து விடக்கூடிய ஒரு சோகக்களே அந்த முகத்தில் இருந்தது. அந்த வயதுக்கு இருக்க வேண்டிய கூச்சமும், நாணமும் அற்றுப் போய், ஏதோ பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டு வாழ்கிருற்போல் கண்களில் ஒர் ஒளி அமைந் திருந்தது. பேச்சில் காரியத்தைச் சாதித்துக் கொள்கிற ஒட்டுறவு; சொற்களில் ஏழைமையின் குழைவு ; நம்பிக்கை