பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


பிள்ளைன்னு-ஒல்லியா சிவப்பா சந்தனப் பொட்டு வைச் சிண்டு சாவடி வாசல்லே உட்கார்ந்து கணக்கெழு திண்டி ருப்பாரே-அவர் தான் ஒரு வழியா என்னேத் தைரியப் படுத்தினர். என்னேக் கூப்பிட்டார். குழந்தை, நீ தைரியமா இருக்கணும். தம்பியைப் படிக்க வைச்சுப் பெரியவனுக்கிறவரை நான் சொல்றபடி செய் ஊர்லே நாலு வீட்டிலே எடுபிடிக் காரியம், பெருக்கத் தெளிக்க ஏற்பாடு செய்யறேன். அதிலே கிடைக்கிறதை வச்சிட்டு மானமாப் பிழைக்கலாம் -அப்படின்னு ஒரு வழி பண்ணி விட்டார். அப்பா சொத்து, சுகம்னு ஒண்ணும் வைச்சிட்டுப் போகலேன்னுலும் ஒண்டிக்கிறதுக்கு ஒரு சின்ன ஒட்டு வீடு-கையகலத்துக்கு வைச்சிட்டுப் போயிருக்கார். மேலக் கோடியிலே சின்னதா பீத்தல் நார்ப்பெட்டி மாதிரி ஓர் ஒட்டுக்குச்சு-நீங்க கூடப் பார்த்திருப்பீங்க. வாசல்லே எருக்கஞ் செடி மொளேச் சிருக்கும். தம்பியும், நானும் அதுலேதான் காலத்தைத் தள்ளிண்டு வரோம்...”

  • சாப்பாடு !...”

" நானே சமைச்சுக்குவேன். எனக்கு எல்லாம் தெரியும் சார் !...”*

  • அது சரி! நான் இந்த வீட்டுக்குக் குடி வந்திருக் கேன்னு உனக்கு யார் சொன்னுங்க ?”
  • அதுவா? நேத்துச் சாயங்காலம் கிராம முன்சீப் சொன்னர். பட்டு! அந்த வேப்ப மரத்தடி வீட்டுக் குப் பட்டணத்திலேருந்து ஒரு புரொபலர் ரிடையராகி வந்திருக் கார். நாளைக் காலையிலே போய்ப் பாரு’ என்ருர். அதான் வந்தேன் சார்.”
  • எல்லாம் சரி. எனக்கு உன்னே ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க வீட்டிலேயும் நீயே வேலை செய்யலாம்.காலேயிலே சுத்தமா வாசலப் பெருக்கித் தெளிச்சுக் கோலம் போட்டு டனும், அப்புறம் உள்ளே மாமிக்கு ஒத்தாசையாகச் சமையலுக்கு நாலு குடம் தண்ணிர் இறைத்துக் கொடுக் கனும், சாயங்காலமும் ஒரு தரம் வீடு பெருக்கணும்,