பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 09 இவ்வளவுக்குமாக மாசத்துக்கு உனக்கு என்ன சம்பளம் வேணும்?...” " அதுதான் நான் அப்பவே சொன்னேனே, சார் ! சம்பளம்னு பெரிசா ஒண்னும் கேட்கமாட்டேன். நீங்க கொடுத்ததைத் திருப்தியா வாங்கிப்பேன். சம்பளமா பெரிசு? மனுஷாள்தான் வேணும்!” சிற்சபேசன் அதிசயித்தார். ஏழைமை அந்தப் பெண் ணுக்கு எவ்வளவு விநயமாகப் பேசும் பழக்கத்தை உண் டாக்கியிருக்கிறது என்று எண்ணிய போது அவருக்கு வியப்பாயிருந்தது. உலகத்தைப் புரிந்து கொண்டு-சுற்றி யிருப்பவர்களையும், சூழ்நிலையையும் நன்ருகத் தெளிந்து கொண்டு அந்தக் கசப்பை அங்கீகரித்து விட்ட ஒரு தெம்பு, அந்தச் சிறுமியிடம் தென்பட்டது. நமக்கு இதுதான் வாழ்வு-இதைக் கொண்டுதான் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஒரு நிறைவை அவளிடம் காண முடிந்தது. -

  • சரி, குழந்தை! இன்னியிலிருந்து காரியத்தைப் பாரு, நான் பார்த்துக் கொள்கிறேன்.’’ என்ருர் சிற்சபேசன். பட்டு நெடுநாட்கள் அந்த வீட்டில் பழகிய வேலைக்காரியைப் போல் சிற்ருடை நுனியை இழுத்துச் செருகிக் கொண்டு வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள்.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய்க் காப்பி குடித்து விட்டு மன வியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்தார். மறுபடியும் திரும்பி அவர் வாசற் பக்கம் வந்த போது தரையில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஓசை கேட்கவில்லை. வேப்ப மரத்தடியில் குனிந்து எதையோ பொறுக்கி எடுத்து ஒவ்வொன்ருக வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பட்டு. எதையோ பொறுக்கிச் சாப்பிடுகிருயே...? அதென் னது?’’ -

  • வேப்பம் பழம் சார் ! எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த மரத்தடியிலே நிறைய உதிர்ந்திருக்கு...”