பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! I 4 கூடத் தன் மனிதர் என்று யாருமே இல்லையே! ஒண்டியா என்ன செய்யறதோ ? பாவம்......” என்று தம் மனைவியை நோக்கிச் சொன்னர். " எனக்கே இது தெரியாது! நேற்று இராத்திரி பெருமாள் கோவிலுக்குப் போயிட்டுத் திரும்பி வர போது அந்தப் பொண்னேட வீட்டு வாசல்லே ஒரே பெண்கள் கூட்டமா இருந்தது. என்னன்னு போய் விசாரித்தேன். பட்டு பெரிசாயிருக்கான்னு தகவலைச் சொன்னு. உள்ளே போய் பார்த்தேன். அது ஒரு மூலையிலே தலையைக் குனிஞ் சிண்டு உட் கார்ந்திருந்தது. என்னடி பட்டு :ன்னேன். பதில் சொல்லாமே என்னைப் பார்த்துச் சிரிச்சுது. அதைப் பாக்கறபோது எனக்கு மனசு கஷ்டமா இருந்தது. பெத்தவ இருந்தா இப்படி ஒரு மங்களமான காரியம் நடந்ததைப் பெருமையா நாலு பேருக்குச் சொல்லுவா. வாசல்லே கோலம் போட்டுக் கொண்டாடித் தலைவாரிப் பூ வைச்சுப் பிட்டும், உருண்டையும் பண்ணி நாலு பெண்களைக் கூப்பிட்டுக் கொடுப்பா. யார் இருக்கா இதுக்கு அதெல் லாம் செய்ய? அளுதையா அழுக்குச் சித்தாடையைக் கட்டிண்டு மூலையிலே உட்கார்ந்திண்டிருக்கு...'

  • ஐயோ பாவம் ! நீயும் இந்த ஊர் அயல் அசல் மனிதர்களைப் போலப் பேசாமல் இருந்து விடாதே. சாயங்க லமா யூசுப் ராவுத்தர் ஜவுளிக் கடைலேயிருந்து ஒரு சீட்டிச் சிற்ருடை வாங்கிண்டு வந்து தரேன். வாசல்லே பூக்காரன் வந்தால் கொஞ்சம் பூவும் வாங்கி வைச்சுக்கோ. போய் ஏதோ முறையா செய்யவேண்டியதைச் செஞ்சிட்டு வா. அது குளித்து வருகிற வரையில் அந்தச் சின்னப் பையனே இங்கேயே வந்து சாப்பிடச் சொல்லிட்டு வா. பட்டுவுக்கும் கொண்டுபோய்ப் போட்டுடு ' என்று பரிவோடு சொன் ஞர் சிற்சபேசன்.

அவர் கூறியபடியே நடந்தது. சாயங்காலம் அவர் மனைவி ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் புதுச் சிற்ருடையும் பூவும் மஞ்சள் குங்குமமும் ஒரு டஜன் கண்ணுடி வளையலும்