பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 5 எடுத்து வைத்துப் புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டு பட்டுவின் வீட்டுக்குச் சென்ருள். போனவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது.

  • ' என்ன ? பட்டு என்ன சொல்ருள் ?’ என்று விசாரித் தார் சிற்சபேசன்.

" அதை ஏன் கேக்கறேள் ? நான் புதுச் சித்தாடையும் பூவுமாப் போய் நின்னதும் அந்தப் பொண் ஒரே பிடிவாதமா இதெல்லாம் வேண்டாம் மாமி’ன்னு அடம் பிடித்தது. நான் பிறந்து வளர்ந்த சீருக்கு இதெல்லாம் இல்லேன்னு ஒரு குறையா ? நீங்க ஏன் வீணு சிரமப் படனும் ?’ என்று சிரிச்சுண்டே சொல்லித்து. அதுக் கில்லையடி, பெண்ணே ! இதெல்லாம் வழக்கம்டி! ஆயிரம் கஷ்டம்லுைம் முறையை விடப்படாது. நல்லது நாளேக்கு வருமா ?’ என்று நானுக வற்புறுத்திச் சொல்லி எல்லாம் செய்துட்டு வந்தேன் ” என்ருள் அவர் மனைவி. - “ என்னவோ இதிலே நமக்கு ஒரு திருப்தி ! அவ்வளவு தான் ' என்று மன நிறைவோடு சொன்னர் சிற்சபேசன். " இத்தனை நாட்கள் முகத்தைச் சுளிக்காமல் உழைச் சுது. சம்பளம்னு ஏதோ கொடுத்தோம். ஆளுல் அது உழைச்சதுக்கு நீங்க கொடுத்த நாலைந்து ரூபாய்க் காசு காணவே காணுது...பெரிசாப் போனப்புறம் இன்னமே எங்கே வீடு வீடா வாசல் பெருக்க வரப் போறது?’’ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள் சிற்சபேசனின் மனைவி. " அப்படியானுல் இனிமேல் பட்டு வேலைக்கு வரமாட் மாள் என்கிருயா ?” " அப்படி அவள் சொல்லலேயானுலும் எனக்குத் தோணறது ' என்ருள் அவர் மனேவி. சாயங்காலம் சாவடியில் தற்செயலாகக் கிராம முனிசிப் ரத்னம் பிள்ளையைச் சந்தித்தார் சிற்சபேசன். பட்டுவைப் பற்றி ஏதோ பேச்சு வந்தது.