பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 3 “ எனக்கு அந்தப் பெண் பேரிலே தனி அனுதாபம், சார் ! இதுவரை எப்படியோ நாலு வீட்டிலே காரியம் செய்து தன்னையும் தம்பிப் பயலையும் காப்பாத்திக்கிட்டுது. இனிமே அது முடியற காரியமில்லேயே ? துக்கிரிப்பய கிராமம் ஏழைப்பட்ட பொண்ணேப் பற்றி என்ன வேணுலும் பேசும். பெரிசான பொண்ணு வீடு வீடா நுழைஞ்சு வேலை செய்யறது நல்லா இருக்காது. இனிமே எப்படிக் காலந்: தள்ளப் போகுதோ?’ என்று ரத்னம் பிள்ளே ஏக்கம் நிறைந்த குரலில் சிற்சபேசனிடம் சொன்னர். ' எனக்கும் அதுதான் யோசனை ’’ என்ருர் சிற்சபேசன். ஆணுல் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்க வில்லே என்பது நாலாவது நாள் விடிந்ததும் தெரிந்தது. இருள் பிரியும் நேரம். காலைக் குளிர் நீங்கவில்லை. மப்ளரை இழுத்துக் கட்டிக்கொண்டு வாசல் பக்கம் வந்த சிற்சபேசன் வேப்ப மரத்தடியில் விளக்குமாறும் கையுமாக நின்று கொண்டிருந்த பட்டுவைப் பார்த்துத் திகைத்துப் போளுர், நீராடிய கூந்தலே அவள் அள்ளிச் சொருகிக் கொஞ்சம் சிவந்திப் பூ வைத்திருந்தாள். கைகளில் அவர் மனேவி கொடுத்த புதிய கண்ணுடி வளையல்கள் குலுங்கின. புதிய சீட்டிச் சிற்ருடையும் கட்டிக் கொண்டிருந்தாள். ரத்னம் பிள்ளைகூட அப்படிச் சொன்னரே! ஒருவ ரையும் கலந்து யோசனை கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பெண் இன்னும் இப்படி விளக்குமாறும் கையுமாக வந்து நிற்கிறதே? என்ற சிந்தனையோடு வேப்ப மரத்தடிக்குப் போளுர் சிற்சபேசன். "சார் ! உங்க வீட்டிலேருந்து மாமி வந்து என்ன ரொம்பப் பெருமைப் படுத்தினுங்க. என்னுலே வீண் கஷ்டம். நாலு நாளா நான் வராமல் வாசல் பெருக்க முடியாமல் சிரமமா யிருந்திருக்கும். குப்பை சுமந்து பேச்சு” என்று வழக்கமாகப் பேசுவது போல் ஆரம்பித் தாள் பட்டு.