பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 " ஆமாம் ' என்ருள் அந்தப் பெண். "தனியாகத்தான் வந்தாளா அல்லது கூட யாரேனும்......” ' இல்லே தனியாகத்தான் ' என்று பதில் சொல்லி விட்டுப் போய்விட்டாள். எனக்கு வியப்பினுல் பேசவே முடியவில்லை. கெளரிஅந்தப் பேதைப் பெண்-இங்கு எப்படி வந்தாள்? தன்னந் தனியாக இந்தப் புனுவில் வந்து தேடுகிற அளவுக்குத் தைரியம் வந்துவிட்டதா? இப்படிக் கேள்விமேல் கேள்வி கள் என் உள்ளத்தில் எழுந்து கொண்டிருந்தன. வாழ்க்கை யிலே எவ்வளவோ பேரைச் சந்திக்கிருேம். சிலருடன் பல நாட்கள் பழகினலும் கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் நினைவு, ஸ்பிரிட்” ஆவியாகி விடுவதைப் போல் மறைந்து விடுகின்றது. சிலருடைய நினைவுகள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதவாறு மனத்தில் வயிரம் பாய்ந்து விடுகின்றன. கெளரியும் எங்கள் மனத்தில் அப்படித்தான் தங்கிவிட்டாள். 漆 来源 妻 பதினறு ஆண்டுகளுக்கு முன் நான் திருநெல்வேலியில் "ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலை பார்த்தேன். திருநெல் வேலிச் சீமையின் தமிழ்ப் பேச்சும், தாமிரபரணியின் தெளிந்த நீரும் இனிமையானவை என்று பலர் சொல்வார் கள். ஆனல் எனக்கோ அனந்தையன் அக்ரஹாரத் தினரின் வாழ்க்கையைப் போல இனிமையானது உலகில் இல்லை என்பது திட்டமான அபிப்ராயம். அந்த்த் தெரு வில் என்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பரம்பரைப் பண்ணேயார்கள் . ஆகவே அறுவடைக்காலம் தவிர மற்றப்போதெல்லாம் அவர்களுக்கு அரட்டைக் காலம். யாராவது ஒருவருடைய வீட்டுத்திண்ணையில் நாள்தோறும் ஒரு மகாநாடு கூடும். ஆங்கிலேய வைஸ்ராயின் விநோத சட்டத்தினுல் தாமிரபரணியில் தண்ணிர் குறைந் தது குேப்புசாமியின் எட்டாவது குழந்தைக்குக் கையில் ஆறு விரல் இருந்ததல்ை, அவனது எதிர்காலப் பதவி