பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் பல விஷயங்கள் குறித்து எழுதாக்கிளவி ’ களாகப் பல நீர்மானங்கள் நிறைவேறும். பிறகு எல்லோரும் யோக நிலையில் அமர்ந்து இஸ் பேட், ஜாக்கி ஆகிய தெய்வங்களைத் துதிப்பார்கள். பிறகு-டேய் ! அடா என்று ஏக வசனத்தில் கூச்சல்கள்எல்லோரும் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொள்ளு தல்-மகாநாடு கலைதல். நாள்தோறும் நடக்கும் இந்த மகாநாட்டைப் பார்க்கும் போதெல்லாம் சீ! என்ன ரெவின்யு உத்தியோகம்? மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் ஊர் ஊராக அலைவதும் வசூலாகும் பணத்தை நெருப் பைப் போலப் பாதுகாத்து வைத்துக் கொள்வதுமே வாழ்க் கையாக ஆகிவிட்டது. இப்படி ஒரு நாளாவது நான்கு மனிதர்களோடு கலகலப்பாக உறவாட முடிகிறதா?” என்று அலுத்துக் கொள்வேன். ஊர் ஊராக அலைந்தாலும் ஒய்ந்து இருக்கும்போது என்னே வாட்டும் தனிமையின் சலிப்புப் பொறுக்க முடிய வில்லை. அதைத் தவிர்ப்பதற்காகவே நான் சாம்பசிவ ஐயருடன் தொடர்பு கொண்டேன். சாம்பசிவ ஐயர் பக்கத்து வீட்டுக்காரர் என்ற அளவுக்கு மிகவும் நல்லவர். எந்த விஷயத்தைப் பற்றியும் சளேக்காமல் பேசுவார். ஆனல், எப்போதாவது நான், “ இந்த நாற்காலி நன்ருக இருக்கிறது ; இல்லையா ? நீங்களும் உங்கள் வீட்டில் நாலு நாற்காலி வாங்கிப் போடுங்களேன் ", " உங்கள் பிள் ஆள வைத்திக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுப்பதுதானே. பாவம் ! காலேஜூக்கு நடையாக நடக்கிருனே ’’ என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தால் உடனே " எனக்குக் கொஞ்சம் வேலே இருக்கிறது. வரட்டுமா ?” என்று கிளம்பிவிடுவார். அவர் போனபிறகு என் மனைவி வந்து என்னிடம், " உங் களுக்குக் கொஞ்சமாவது மனிதர்கள் சுபாவத்தைப் புரிந்து கொள்ளும் புத்தியே கிடையாது. அவருக்கு காசை நழுவ விடுவது என்ருல் கையையே நறுக்கிக் கொள்வதுபோல, அந்த மாதிரி மனிதரிடம் போய் இப்படியா செலவுக்கு வழி சொல்வது?’ என்று வெறுத்துக் கொள்வாள்.