பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置2翌 எனக்குச் சாம்பசிவ ஐயருடைய நடத்தை ஆச்சரிய மாகவே இருந்தது. நிலமும் சொத்தும் குறைவின்றிக் குவித் துள்ள அந்த மனிதர் ஏன் சாயவேட்டியைத் தவிர, வேறு எதையும் விரும்புவதில்லை ? அரையணு குறைவாகத் தேங் காய் வாங்குவதற்காக ஊரெல்லாம் அலைவதில் ஏன் தளர்வ தில்லை? அந்த மனிதருடைய உள்ளத்தில் ஏதோ இருக்க வேண்டும். ஒருவேளை வைத்தியை இங்கிலாந்து, அமெ ரிக்கா என்று வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பப் போகி ருரோ !” என்று எண்ணினேன். ஒரு நாள், ' என்ன மாமா, வைத்தியை மேலே என்ன படிக்கச் சொல்வதாக உத்தேசம் ' என்று வினவினேன். சாம்பசிவ ஐயரின் முகத்தில் ஒரு திருட்டுப் புன்னகை ஓடியது. 'இப்போது தான் காலேஜிலே சேர்ந்திருக்கிருன். பிள்ளையாண்டான் பாஸ் பண்ணின அப்புறம் அவன் பாடு அவன் மாமனர் பாடு. எனக்கேன் வீண் தலையீடு ?” என்ருர். நான் திடுக்கிட்டுப் போனேன். " என்ன உங்க பிள்ளைக்குக் கல்யாணமாகி விட்டதா? எனக்குத் தெரியவே தெரியாதே !’ என்றேன். பள்ளிக் கூடப் பையன்களின் விஷம புத்தியும், குமரப் பருவத்தின் அலட்சியத் தன்மையும் கலந்த வைத்தியைக் கல்யாண மான மனிதன் என்று நம்பவே முடியவில்லை. "யார் பெண் ?’ என்று திகைப்பை மறைப்பதற்காகக் கேட்டேன். "எல்லாம் நம்ப பக்கந்தான். கடையத்துப் பண்ணையார் நல்லசாமி ஐயர் பொண்ணு ஏதோ மஞ்சக்காணி இருக்கு: பதினுலு வயசாகிறது அவளுக்கு-கெளரிக்கு; மாசத்திலே ஒருதரம் இங்கே வருவாளே ! நீங்க பார்த்ததில்லையா ? ஏன் சார். * நான் பேசாமலிருந்தேன்; ' காலா காலத்தில் கல்யா ணம் பண்ணிவிட வேண்டும் குழந்தைகளுக்கு' என்று பொதுவாகச் சொன்னர், சாம்பசிவ ஐயர். எனது பெண்ணைச் சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணிக் கொடுப் அதற்காக அப்படிச்சொன்னரா, அல்லது தமது செயலுக்குச்