பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 சமாதானம் தேடுவதற்காக அப்படிப் பேசினரா என்று: எனக்குத் தெரியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணு ’’ என்று சொல்லிய வண்ணம் சாம்பசிவ ஐயர் உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னே ஒரு பெண்என் மகள் சுமதியை விட சற்றுப் பெரியவளாக இருப் பாள்-மேனி துவள வந்து என்னே வணங்கினுள். வீட்டி னுள்ளிருந்து சுமதியும், என் மனைவியும் வந்து கெளரியை அழைத்துக் கொண்டு சென்ருர்கள். கெளரியிடம் இன்னும் பேதைப் பருவத்தின் இனம் புரியாத இயல்பு தேங்கிக்கிடந்தது. அவளுடைய முகத் திலும் கண்களிலும் குழந்தையின் ஆர்வம் பொங்கி வழிந் ததே தவிர யுவதியின் மயக்கும் சக்தி அவற்றில் காணப் படவில்லை. மேனி எல்லாம் நகை பூட்டியிருந்தார்கள். அந்த நகைகளும் சரி, கெளரி நாணி நடந்ததும் சரிஎல்லாம் எனக்குப் பருவம் மீறிய சுமையாகத் தான் தென் பட்டன, இந்தச் சின்ன வயதிலே குடும்ப பாரத்தைச் சுமக்கச் செய்து விட்டார்களே என்று எண்ணினேன். ஆணுல் என்னுடைய எண்ணத்திற்குப் பதில் கூறுவது போல அந்தச் சம்பவம் நடந்தது. அப்போது கெளரி எவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கிளுள் ! ஒரு ஞாயிற்றுக்கிழமை ; காலை பத்து மணி இருக்கும். நான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தெருவில் சலசலப்பு ஏற். பட்டது. வெளியே எட்டிப் பார்த்தேன் சாம்பசிவ ஐயரின் வீட்டு வாயிலில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாலந்து ஜவான்களுடன் நின்றுகொண்டிருந்தார். தெருவில் உள்ள * அரை டிக்கெட்டுகள் ’’ எல்லாம் வேடிக்கை பார்ப்பதற். காகக் கூடி நின்றுகொண்டிருந்தன. " வைத்தியநாதன் என்கிற பையன் இந்த வீட்டில் தானே இருக்கிருன் ?’ என்ருர் இன்ஸ்பெக்டர். "ஆமாம்” என்ருர் சாம்பசிவ ஐயர் நடுக்கத்துடன். ' நாங்கள் இந்த வீட்டைச் சோதனை போடவேண்டும். இந்த ஊர் காலேஜ்