பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


ஒரு நிமிஷம் நகர்ந்தது. வாசலைநோக்கி அம்புபோல் பாய்ந்தான், துரை. -

  • " துரை, துரை,...இங்கே வாடா...' கனகம் விம்மிஞள்.

“ஏண்டி அழறே ? வயத்திலே இருக்கிற கொய்யாப் பிஞ்சு ஜீரணமானுல் தானே வருகிருன் !” அவன் வரவில்லை. இன்றைக்கு வருவான். முற்றத்தில் எத்தனே காக்காய்கள் கத்துகின்றன !...இருபது வருடங்கள் ஓடி விட்டனவே! ஒரு வேளை, வீட்டை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பானே ? மாட்டான். நான்தான் பகல் முழுவதும் வாசலுக்கு எதிரேயே நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேனே !’ 癌 豪 新 அப்போது ஏற்பட்ட மன வீழ்ச்சிக்குப் பின் அருணுசலம் நிமிரவே யில்லே. பல வாரங்கள், பல மாதங்கள் தேடினர். தெரிந்தவர், அறிந்தவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினர். மாதங்கள் பறந்தனவே தவிர மகிழ்ச்சி தரும் செய்தி வரவில்லை. ஒரு வருஷம் மறைந்தது. துரை வீட்டிலிருந்து ஓடிப்போன அதே நாள். காலேயில் எழுந்ததிலிருந்து பித்துப் பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்தார், அருணுசலம். இவ்வளவு அதைரிய மாய் அவர் என்றைக்கும் இருந்ததில்லை. “ கழனிக்குப் போகல்லியா?" தூரத்தில் நின்றவாறே கனகம் கேட்டாள். பதிலில்லை. அருகே வந்தாள்.

  • மணி எட்டாயிடுத்தே!”

அவருக்குத் தன் மனேவியைப் பார்க்க வெட்கமா யிருந்தது. உச்சி முகட்டைப் பார்த்தார். “சரியா...ஒரு வருஷம்.ஆயிடுத்து...”