பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


பிரின் ஸிபாலிடமிருந்து எங்களுக்கு ரிபோர்ட் வந்திருக் கிறது ' என்று கூறிய வண்ணம் இன்ஸ்பெக்டர் தமது ஆங். களுடன் உள்ளே நுழைந்துவிட்டார். சாம்பசிவ ஐயருக்கு நா எழவில்லை. வைத்தி பூனை போல் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்கள் தேடாத இடமில்லை. நெல் குதிர், பரண், பெட்டிகள் எல்லாவற்றையும் துருவிப் பார்த்து விட்டனர். ஒன்றும் பயனில்லை. கடைசியில் வீட்டின் பின் புறம் இருந்த தவிட்டுப் பானையைக் கிளரத் தொடங்கினர். அதில் கையை விட்டுத் தோண்டத் தோண்ட விதவிதமான கடிகாரங்கள், சில தங்க மோதிரங்கள், மைனர் செயின்கள் எல்லாம் பாற்கடலிலிருந்து பொருள்கள் தோன்றுவது போல் வெளியே வந்தன. நான் அயர்ந்து போனேன் ; வைத்தியின் முகம் கன்னிப்போயிருந்தது. இன்ஸ்பெக்டர் என்னேயும் வேறு சிலரையும் பஞ்சாயத்தாராக வைத்துக் கொண்டு வழக்குப் பதிவு செய்தார். வைத்தியைக் கைது செய்து அழைத்துக்கொண்டு போர்ைகள். தெருவில் கதம்பமான பேச்சுக்கள். சீ! பாவம், வைத்தி சாது......". " ஓகோ சாதுவா ! உனக்கென்ன தெரியும் பய பூனை மாதிரி இருக்கானே ஒழிய பலே கைகாரன்.” " காலேஜிலே ஹாஸ்டல் பையன்களெல்லாம் எண் ணெய் தேச்சுக்கறத்துக்கு முன்னே அறையிலே கடிகாரம், மோதிரம் இதெல்லாத்தையும் கழட்டி வைச்சுட்டுப் போவானுக, இவன் தோட்டத்திலே உலாத்தற கணக்கா ஜன்னல் வழியா வாரிண்டு வந்துடுவானமே." " அப்பன் கஞ்சளுயிருந்தா மகன் களவாணியாத்தான் இருப்பான்!" - - சாம்பசிவ ஐயருக்கு இப்போ கை கரையப் போறது. ஹே ஹே என்று ஒருவர் ஆனந்தப்பட்டார். - ಡಿಆrg.ಶಿರr, சாட்சியங்கள் என்னும் சட்டத்தின் சம்பிர தாயச் செயல்களுக்குப் பிறகு வைத்தியை ஜாமீனில் விடுவதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்கள். கெளரிக்கும்