பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選25 அவள் தகப்பணுருக்கும் செய்தி போயிற்று. இருவரும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். என் மனைவி, கெளரியை அழைத்து வீட்டில் வைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லத் தொடங்கினுள். நான் சாம்பசிவ ஐயரைப் பார்க்கச் சென்றேன். " மாமா, ஏதோ போதாத காலம் : பையன் புத் தி இப்படித் திரிந்து போய்விட்டது. ஹ”ம், இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள். ஏதோ ஐயா யிரமோ, ஆயிரமோ ஜாமீனைக் கட்டி அழைத்து வாருங்கள். எனக்குத் தெரிஞ்ச வக்கீல் இருக்கார். ஏதோ நம்மால் ஆனதைப் பார்க்கலாம் ' என்று அவரிடம் சொன்னேன். ': அதெல்லாம் பண்ணி வைக்க வேண்டியவாள் அதோ இருக்கா ; மாப்பிள்ளை மேலே கொள்ளை ஆசை, இல்லாவிட்டா சிரமத்தைச் சிரமம்னு பார்க்காம கடை யத்திலிருந்து ஓடி வருவாளா?' என்று சாம்பசிவ ஐயர், தமது சம்பந்தி நல்லசாமி ஐயரைக் காட்டினர்.

  • சே! சே! அப்படிச் சொல்லக்கூடாது. பெத்து வளர்த்த ஒங்க கைக்கு மேலே தான் என் கையை உயர்த். துவதாவது இந்தக் காரியத்தை நான் பண்ணிஞ உங்கள் கெளரவம் என்ன ஆகும்?” என்ருர் நல்லசாமி ஐயர்.

என்னது ? படிக்க வைத்து வேலே தேடிக் கொடுப் பது என் பொறுப்பு என்கிற பேச்சிலே தானே கல்யாணமே நடந்தது. இப்போ படிப்புக்குத் தடங்கல் வந்ததனுலே நீர்தான் ஐயா ஈடுகொடுக்கணும்.’’ என்று நேரடியாகப் பேசிஞர் சாம்பசிவ ஐயர். ' உங்க பையன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தால் இந்த சம்பந்தத்துக்கே நான் ஒப்புக்கொண்டிருக்க மாட். டேன்’ என்று இரைந்தார் நல்லசாமி ஐயர். - எனக்கு ஏற்பட்ட வெறுப்பிற்கு அளவே இல்லை. பணத். திற்காக-தங்கள் கஞ்சத்தனத்திற்காக இந்த மனிதர்கள் எப்படிப் புதுப்புது நியாயங்களைக் கற்பிக்கின்றனர்! அந்தப் பேதைப் பெண் கெளரியின் மனம் என்ன பாடுபடும் என்று கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்தார்களா ? நான் வீடு திரும்பியபொழுது ஒரு பரிதாபமான காட்சி தென்பட்டது.