பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


அதன் பிறகு நான் சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டேன். கெளரியிடமிருந்து என் மனைவிக்கு அடிக்கடி கடிதம் வரும். வைத்தியநாதன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ' கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ள மறுக் கிரு.ர்கள். வேலை கிடைப்பதும் கடினமாக இருக்கிறது’ என்று எழுதியிருந்தாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது பெண் சுமதியின் கல்யாணத்திற்கு கெளரி வந்திருந் தாள். தன்னுடைய மஞ்சள் காணி நிலத்தை விற்று வைத் தியநாதனை ஒரு சைக்கிள் கம்பெனி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தொழில் நன்ருக நடப்பதாகவும் தெரிவித்தாள். அதற்குப் பிறகு பத்து வருடங்கள் கடந்துவிட்டன. நானும் என் மனேவியும் புளுவில் எங்கள் பெண்ணுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டோம். இங்கு வந்த பிறகு கெளரி யிடமிருந்து கடிதம் வருவது நின்று போய்விட்டது. எனக் குக் கெளரியின் நினைவு தோன்றும் போதெல்லாம், " வைத் தியநாதன் ஒரு மூடன் அவனுக்குக் கெளரியைப் போன்ற மனைவி கிடைத்திருப்பது பூர்வ ஜன்ம பலனத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். -

  • 熔 醬

புளு நகரின் காலப் பணிதான் பிரபலமானதாயிற்றே ! மணி ஏழான பிறகும் கூட பனித்துளிகள் நிலத்தில் படிவது நிற்கவில்லை. கேட்டின் இரும்புச் சட்டங்களில் பணித் திவலைகள் அரும்பி, திரண்டு, தரையில் விழும் அழகை ரஸித்துக் கொண்டிருந்தேன். - " என்ன மாமா கெளரியைத் தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ? என்று ஒரு பெண் குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் ; கெளரிதான் ! எவ்வளவு மாறி விட்டாள் பிச்சோடாப் பின்னல், கையில் கடிகாரம், பிளாஸ்டிக் பை வேறு இவளைப் பார்த் தால் பழைய கெளரி என்று நம்ப முடியுமா?