பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 1 என்று ஏதாவது வாங்கினுல்தானே ? பணத்தைக் கையால் தொடுவதில்லை யென்ற ரகம்தான். சம்பளப் பட்டியலில் கையெழுத்தை மட்டும் ராயசமாகப் போட்டுவிடுவார். "அதில் ஒன்றும் குறைச்சலில்லை. கையெழுத்து பிரமாதமாக இருக்குன்னுதானே இங்கே வேலையே கொடுத்தான்.” கையெழுத்து சோரு போடுகிறது. தலையெழுத்து இத்தனே மோசமாக இருக்கிறதே! சம்பளத்தில் முக்கால்பங்கு ஆபீசி லேயே பிடித்து விடுகிருன்! மீதி என்ன, பிச்சைக் காசு. நான்கு வருஷத்துக்கு முன்னுல் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்று சிவசங்குவின் மனேவி தலைகீழாய் நின்ருள். அவரும் ஆபீஸ் அலேச்சலுக்கு நடுவே ஓடி, ஆடி அலைந்து எவனே ஒருவனே மாப்பிள்ளே என்று பிடித்து வந்து கொட்டு மேளம் கொட்டி கல்யா ணத்தை முடித்து விட்டார். அதற்கென்று பிராவிடண்டு பணத்தில் கடன் வாங்கியாகிவிட்டது. கடன் வாங்கின அந்த இரண்டாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்ட புண்ணியவான், அந்தக் கடன் கால்வாசி அடை படுவதற்குள்ளேயே கண்ணே மூடிவிட்டு, சிவசங்குவின் பெண்ணை சிவசங்கு வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டான். கல்யாணச் செலவில்ை, பின்னுல் பெண்ணே வளர்க்கும் செலவு குறையும் என்று புள்ளிக் கணக்குப் போட்டுப் பார்த்து ஆசைக் கோட்டை கட்டிய சிவசங்கு இந்த நிகழ்ச்சியால் அசந்துவிட வில்லை. இம்மாதிரி சோதனைகள் எல்லாமே தன்னைப் போன்றவர்களுக்காகவேயன்றி பின் வேறு யாருக் கசகவாம்? அவர் அப்படித்தான் எண்ணினர். பெண்ணைப் பற்றி இரண்டாவது முறை கவலைப்படத் தொடங்கிய போது, சம்பளத்தில் வெட்டு விழ ஆரம்பித்து விட்டது. கடனே அடைக்காவிட்டால், கம்பெனிக்காரன் விட்டு விடுவான ? அதை முதலில் பிடித்துக் கொண்டு மீதியைத் தானே தருகிருன்! இந்த அமளிக்கு நடுவே சிவசங்குவின் மனைவிக்கு உடற்கோளாறு வந்து சேர்ந்தது. பசிக்கும்; சாப்பிட்டால் ஜீரணமாகாது; சாப்பிட முடியாது.