பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重32 சாப்பிடாமலிருக்கவும் முடியாது. கூடவே பெண்ணேப் பற்றிய ஏக்கம் ! வைத் தியம் வேண்டாமென்று அந்த அம்மாள் கண்டித்துச் சொன்னுள். ஆளுல் ஊரறியத் தன் சுக துக்கங்களில் பங்கெடுக்கச் சம்மதித்த அவளே, அந்த நிலையில் வைத்திய உதவியில்லாமல் விட்டால் அந்தப் பாபம் தன்னைச் சும்மா விடாது என்ற பயம் உண்டு சிவசங் குவுக்கு. பணத்தைப் பணமென்று பாராமல் செலவிட்டார். அதுவும் கடன்தான். செலவழித்த பணம் முழுவதையும் ஒரு பண முடிப்பாகக் கட்டி, யமனிடம் லஞ்சமாகக் கொடுத் திருந்தால் ஒருவேளே அவன் அந்த அம்மாளை விட்டுவிட்டுப் போயிருப்பாளுே என்னவோ? அந்த மருந்துப் புட்டிகளும் இஞ்செக்ஷன் குப்பிகளும் மட்டும் மசியாமல் சிவசங்குவின் உழைத்த காசையும், உற்சாகத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டதோடு திருப்தியடையாமல், அவரது மனேவிளக்கின் உயிரையே குடித்துவிட்டுத்தான் ஓய்ந்தன. அழ வேண்டிய தெம்பும் உணர்ச்சியும் கூட இல்லே சிவசங்குவுக்கு. அவருக்கு ஒரே கவலை எத்தனே கடன் வாங்கிளுேம், எப்படி அடைப்போம் என்று. அவருக்கு எத்தனே வருஷ சர்வீஸ் பாக்கி, மாதம் எவ்வளவு பிடிக்க ’ வேண்டும் என்று கணக்கிடத்தான் ஆபீசிலேயே ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஒருவர் கோட்டும், சூட்டுமாக இருக் கிருரே, ஆகவே அந்தப் பிரச்னையும் சிவசங்குவுக்கு எழ sūsుడ్విు. நூற்றைம்பது ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டு விட்டு ஐம்பது ரூபாயுடனும், நாற்பது ரூபாயுடனும் வீடு திரும்பும் துணிச்சலும், அந்த ரூபாய்க்குள் வாழ்க்கையை ஒட்டி விடுகிருேம் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந் தது. அதுவும் வேடிக்கைதான்! வீட்டில் உப்பு இல்லை, புளி இல்லை என்று வாயைத் திறந்து சொல்ல மாட்டாள் அவரது உடன் பிறந்த தங்கை-அதுவும் ஒரு நாதியற்றது. தான் ! அண்ணனிடம் சொல்லி அவரைக் கலங்க அடிப்பா னேன் என்று பச்சாத்தாபத்தில், தானே மளிகைக் கடை யிலும், செக்குமேட்டிலும் கடன் சொல்லி, சாமான் வாங்கி குடித்தனம் நடத்தினள். அண்ணனுக்கு நன்மை