பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


தேதி தப்ப வேறு வழி? இரண்டாம் தேதியோ, பின்னரே வந்தால் கையில் பணமில்லை என்று-உண்மையை தைரிய மாகச் சொல்லி விடலாமல்லவா ? இந்தச் சூழ்ச்சியைக் கண்டு கொண்டார் மாணிக்கம். " சிங்கத்தை குகையிலேயே பிடிக்கவேண்டும் என்று சிவசங்குவின் ஆபீசை முற்றுகையிடத் தொடங்கினர். இரண்டு, ஒன்று, அரை கால்-கிடைத்தவரை லாபம்தானே என்று வசூலிப்பார். குருவி மூக்கால் சேர்ப்பது போல மாணிக்கம் தன் கடனே சுயமுயற்சியால் அடைத்துக் கொண்டிருந்தார் ! அப்பேர்ப்பட்ட புண்ணியவான்

  • இந்த மொதத்தேதி அலுவலா ஆம்பூர் வரையிலெ போறேன். ஊரிலே இருக்க மாட்டேன். வர பத்து நாள் மேலே ஆகும். காரியம் முடியறதைப் பொறுத்து... ஆகை யாலே உம்மைத் தொந்தரவு செய்ய மாட்டேன். அடுத்த முதத் தேதி ஸ்ப்ஜாடா தீத்துடனும் ” என்று எச்சரிக்கை விடுத்தபோது அது எச்சரிக்கையாகவே தோன்றவில்லை. சிவசங்குவுக்கு. ஒரு பெரிய வரம் அளிக்கப்பட்டதாகவே தோன்றியது. ஒரு முதல் தேதிக்கு அவருக்கு மன்னிப்பு ! எத்தனை பெரிய விஷயம். அதுவும் அந்த-வரப் போகிறமுதல் தேதி.

擊 盗 粥 முந்தைய மாதமே ஆபீஸ் கடன் அநேகமாக அடை பட்டு முடிந்து விட்டது. வேதனைக்குப் பின் பெற்றுப் போட்டுவிட்ட தாய் போல கடைசித்தவனே செலுத்திய நிம்மதியில் சிவசங்கு திளைத்திருந்தார். வெளியிலிருந்த கடன்களிலும் ஓரளவு தீர்த்தாகி விட்டது. கடன் அடை யவும் ரிடயராகவும் சரியாகத் தானிருக்கிறது. கையிலே வர்ர பணம் கொஞ்ச நஞ்சம் கடனே அடைக்கப் போதும். ராஜாளி மாதிரி வட்டம் போடுகிற ஆட்களிடம் தப்ப முடியுமா? சில்லறைக் கடன்தான் கொஞ்சம் நின்று போய்விட்டது. பெட்டிக் கடைக்காரனிடம் முப்பத்தைந்து ருபாய் வரை ஏறிவிட்டது. ஸ்வீட், காரம் சாப்பிடாமல், பூவன்பழம், ரஸ்தாளிப் பழம் உரித்துப் போட்டே இப்படி